கவிதைகள்

முயல்குட்டியாய் பதுங்கிக்கொண்டேன்!.. ( கவிதை ) …. முல்லைஅமுதன்.

ஒரு வெள்ளிக்கிழமையில் தான்
தூக்கம் வரவில்லையென
அப்பா
முற்றத்தில் கயிற்றுக்கட்டிலைப்போட்டுப் படுத்தார்.
பிறகு தலைவாசலுக்குள் முடங்கிக்கொண்டார்.
ஒரு வெள்ளிக்கிழமை
நாலுபேரோடு போனார் உயிரற்றவராய்..
சாத்திரம் சரியில்லை என
தலைவாசால் இடம்  மாறியது.
அப்பாவின்
கயிற்றுக்கட்டில்
கறையான் தின்று குற்றுயிராய் வேலியோரம் கிடந்தது. 
யார் இவரென
பேரர்கள் கேட்கிறார்கள்.
சொல்லவும் கதைகள் நிறைய உண்டு..
அப்பாவின் குறைச்சுருட்டை பாதுகாக்கின்றேன்
ஒரு பொன்வண்டைப்போல..
தீப்பெட்டிக்குள்
அடக்கமுடியாநினைவுகளுடன்…
என்னை யாரென இவர்கள் கேட்கவும் கூடும்..
முயல்குட்டியாய் பதுங்கிக்கொண்டேன்.
முல்லைஅமுதன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *