கவிதைகள்

பாரதத்தாய் உலகில் வீரியத்தின் வடிவம்!…. ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

குருதியொடு கண்ணீர் 
கொட்டியது மண்ணில்
வெறிகொண்ட வெள்ளை
ஆடியது வேட்டை  !
 
பறிகொடுத்தார் உயிரை
பாரதத்தை மீட்க
நெறிநின்றார் மக்கள்
நெடுவெளிச்சம் கண்டார் !
 
தாய்மண்ணை மீட்க
தாம்கண்ட கஷ்டம்
வாழ்வெல்லாம் மக்கள்
மனவுறுதி ஆச்சு !
 
யாரெதிர்த்து வரினும்
போரெழுந்து வரினும் 
வீரமுடன் எதிர்த்து
விரட்டிடுவார் மக்கள் !
 
சுதந்திரத்தின் விடியல்
குடியரசாய் விரிந்து
மக்களது ஆட்சி
மலர்ந்ததுவே சிறப்பாய்  !
 
பாரததத்தாய் உலகில்
வீரியத்தின் வடிவம்
பண்பாடி நாங்கள்
கொண்டாடி மகிழ்வோம்  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *