கவிதைகள்
தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்திடுமே! (சிறுவர்களுக்கான பாடல்)….. பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா!

தைமாதம் பிறந்திடுமே தமிழ்ப் புத்தாண்டு மலர்ந்திடுமே
வையமெல்லாம் இன்பத்தில் மகிழ்ந்திடுமே!
காலையிலே நேரத்தோடு எழுந்திடுவோமே
கதிரவனைக் கைகூப்பித் தொழுதிடுவோமே
ஆலயங்கள் சென்று நாங்கள் வணங்கிடுவோமே
அன்னை தந்தை பாதங்களைப் பணிந்திடுவோமே
பாலுடனே அரிசிசேர்த்துப் பொங்கிடுவோமே
பலவிதமாய் பலகாரம் செய்திடுவோமே
நாள்முழுதும் புத்தாடை அணிந்திடுவோமே
நண்பருடன் மகிழ்ந்துவிளை யாடிடுவோமே
தைமுதலே ஆண்டுமுதல் என்றிடுவோமே
தரணிக்கெல்லாம் அதைஎடுத்துச் சொல்லிடுவோமே
மெய்யறிஞர் கண்டவழி சென்றிடுவோமே
மேதினியில் தலைநிமிர்ந்து நின்றிடுவோமே
( பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)
![]()