கவிதைகள்

சிறுமியின் கண்களில் ஔிரும் நாவப்பழம்!… ( கவிதை ) … கவிஞர் அப்துல் ஜமீல்.

இரவுப் பறவைகளிடம்
தொலைந்துபோன
ஒலிச்சி நின்ற நாவப்பழங்களை
தேடிக் கொண்டிருக்கும் கணங்களில்
நாவப்பழம் பொறுக்கவென
என் வீட்டு முற்றத்திற்கு
படுத்த பாயிலிருந்து எழுந்து
வாரிவிடப்படா கூந்தலுடன்
சாளவாய் படிந்தபடி வந்து
வைத்த கண் வாங்காது
மரத்தை அண்ணாந்து பார்த்து நிற்கும் 
ஏழைச் சிறுமியின்
கண்களுக்குள் ஔிர்கின்றன
ஒரு கொத்து நாவப்பழங்கள்
♥
ஜமீல்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *