கவிதைகள்

என்றும் வாழ்த்தை வழங்கிடுவோம்!…. ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

இனிமை பயக்கப் பேசிடுவோம்
      இயலும் வரைக்கும் உதவிடுவோம்
பகைமை மறக்க முயன்றிடுவோம்
      பலரும் விரும்பப் பழகிடுவோம் 
நினைவில் நல்லதைத் தேக்கிடுவோம்
       நெஞ்சைப் பளிங்காய் ஆக்கிடுவோம் 
வழியைத் தேர்ந்து நடந்திடுவோம்
        வாழ்வில் நிறைவைக் கண்டிடுவோம்  ! 
 
 
குறைகள் பேசா இருந்திடுவோம்
     குன்றில் விளக்காய் ஒளிவிடுவோம் 
கறைகள் களைய முயன்றிடுவோம்
      கண்ணியம் காண விழைந்திடுவோம்
தலையில் கனதி குறைத்திடுவோம்
       தடைகள் வந்தால் தகர்த்திடுவோம்
நிலையில் உறுதி கொண்டிடுவோம்
        நிம்மதி வாழ்வில் நிறைத்திடுவோம்  ! 
 
 

 கனவில் நல்லதைக் கண்டிடுவோம்                   

       கருத்தில் தூய்மை இருத்திடுவோம் 
கருணை கண்களில் நிறைத்திடுவோம்
       கயமை கண்டால் கடிந்திடுவோம் 
அன்பை வாழ்வில் அணைத்திடுவோம்
       ஆத்திரம் என்பதை அகற்றிடுவோம்
என்றும் வாழ்த்தை வழங்கிடுவோம்
       இரக்கம் துணையாய் ஆக்கிடுவோம்  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *