கவிதைகள்

மாநிலம் எங்கணும் மங்கலம் பொங்கவா!…. ( கவிதை ) ……. மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

இருபதே சென்றுவா
இருபதொன்றே நன்றுவா
வந்திடும் கொரனாவை 
வராதுமே செய்துவா  !
 
நல்லன அளிக்கவா
வல்லன கொடுக்கவா
வெல்லுவோம் என்றிடும்
வீரத்தை உணர்த்தவா  !
 
மதுவினை ஒழிக்கவா
மங்கையர் காக்கவா
சதிகளை தடுக்கவா
சன்மார்க்கம் நிலைக்கவா !
 
அரசியல் சிறக்கவா
ஆட்சிகள் நிலைக்கவா
கயமைகள் விரட்டவா
கண்ணியம் காக்கவா  !
 
உழவர்கள் உயரவா
உழைப்பவர் சிரிக்கவா
கயவர்கள் ஓடவா
காமுகர் மடியவா  !
 
ஆணவம் அகலவா
ஆன்மீகம் பெருகவா
நாடெலாம் நலமுடன்
நாளுமே இருக்கவா   !
 
கற்றிடும் மாணவர்             
கல்வியில் உயரவா
பெற்றவர் வாழ்விலே
பெருஞ்சுமை குறையவா  !
 
மழைவளம் சிறக்கவா
வரட்சியை விரட்டவா
மாநிலம் எங்கணும்
மங்கலம் பொங்கவா   !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *