கவிதைகள்
சாவுக்கு சாபம் கொடு!…. ( கவிதை ) …. செ.துஜியந்தன்.

வாழ்க்கை இறைவன் தந்த வரம்
வாழும்வரை நீயும் போராடு
வறுமை வந்து வெறுமை தந்தாலும்
வறுமையை பொறுமையோடு விரட்ட போராடு
கடன் வந்து கழுத்து வரை நெரித்தாலும்
கடனை கடும் உழைப்பால் விரட்ட போராடு
காதல் வந்து இதயத்தை கிழித்தாலும்
கவலையை புன்சிரிப்பினால் விரட்ட போராடு
ஏமாற்றம் தடுமாற்றம் துரோகம்
எது வந்து நின்றாலும் துணிவோடு போராடு
ஏனிந்த வாழ்க்கையென்று மனம் நொந்து நின்றாலும்
எழுந்து நின்று எழுச்சியோடு போராடு
சாவு வந்து உன்னை வாவென்று அழைத்தாலும்
சாவுக்கு முன் நின்று சளைக்காமல் போராடு
சாவிலும் நீ சரித்திரம் படைத்து
சாவுக்கே சாபம் கொடு
![]()