கவிதைகள்
இறப்பை நினை!…. ( கவிதை ) …. செ.துஜியந்தன்.

இறப்பை வரமாய் வாங்கி வந்த மனிதா!
இருப்பதோ கொஞ்சக் காலம்
இறுமாப்பைத் தொலைத்துவிடு
இல்லாத ஏழைக்கும் உவந்து கொடு
இரந்துண்டு வாழ்வோர்க்கும் வழிகாட்டு
இன்முகம் காட்டி இதமாகப் பேசிடு
இதயத்தில் அன்பை விதைத்திடு
இகழ்வோரை விலக்கி நடந்திடு
இல் வாழ்வில் பாவத்தை தொலைத்திடு
இவ் வாழ்க்கை பொய்யென்று நினைத்திடு
இறை வாழ்வே மெய்யென்று உணர்ந்திடு
இறை நாமம் தினம் உரைத்திடு
இல்லறம் நல்லறமாகிடும்
இன்பநிலை மேலோங்கிடும்
இறையருள் கிடைத்திடும்
இறப்பும் உன் சிறப்பைக்கண்டு கலங்கிடும்
![]()