கவிதைகள்
தோல்வி!….. ( கவிதை ) …… செ.துஜியந்தன்.

இளைஞனே எழுந்து வா!
தோற்பது வாழ்வில்
ஆவமானம் அல்ல
தோல்விக்கு அஞ்சி –நீ
ஓடி ஒளிப்பதா? இல்லை..
இல்லை
தோல்வி என்னை தேடிவா
தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி
வாருங்கள்
தோல்வி என்னை தொட்டுப்பாருங்கள்
தோல்வி வாழ்க்கையின் இரகசியம்
தோற்க தோற்க மனம்
செம்மைப்படும்
அனுபவம் உங்கள் சொத்தாகும்
வாழ்க்கை வசந்தமாகும்
அச்சம் என்பதே உங்கள்
அகராதியில் இல்லாமல் போகும்
வாருங்கள்
தோல்வி என்னை
தொட்டுப்பாருங்கள்
தோற்பவர் தொடர்ந்து
தோற்பதில்லை
தோல்விகள் வாழ்வில்
நிலைப்பதில்லை
வாருங்கள்
தோல்வி என்னை
தொட்டுப்பாருங்கள்![]()
![]()