கவிதைகள்
கல்லடிப் பால காத்திருப்பு!….. ( கவிதை ) ….. செ.துஜியந்தன்.

கல்லடிப் பாலத்தின் ஓரத்திலே
கச்சான் காத்தடிக்கிற நேரத்திலே
மச்சாளப் பாத்து நான் காத்திருக்கேன்
மத்தியான வெயில் நேரத்திலே
எஸ்.எம்.எஸ். அனுப்பியும் பாத்துப்புட்டன்
மிஸ் கோல் அடிச்சும் பாத்துப்புட்டன்
வட்சப் அனுப்பியும் கேட்டுப்புட்டன்
வருவாளோ வரலையோ தெரியலையே
மச்சாளுக்கு என் மேல வெறுப்பில்ல
மாமிக்கு கொஞ்சம் விருப்பமில்ல
மாமாக்கும் அப்பப்போ புடிப்பில்ல
மச்சாள விட்டா எனக்கு வேறாளில்ல
மட்டக்களப்பு சாத்திரி சொன்னான்
மாமாங்க கோயிலில் நேர்த்தி வைச்சா
மன வருத்தமெல்லாம் தீருமெண்டு
மச்சாளக் கூட்டித்து மாமாங்கம் போகவே
கல்லடிப் பாலத்தில் காத்திருக்கன்.
![]()
![]()