கவிதைகள்

ஏமாறாதிருத்தல் காண்பீரோ!…. ( கட்டுரை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

மண்ணிலே நிலையில்லா இவ்வுயிர்க்கு
மற்றொரு இடத்திலே நிரந்தரமென்றால்
அற்புதம் என்றெல்லோரும் அதையேற்று
ஆற்றுவினை இங்கெதுவும் செய்திடாமல்

காணி வாங்கியது போதாதென்றவரும்
கடுகளவும் சிந்தையில் வைத்திடாதும்
காணிமேல் காணிவாங்கி சேர்க்கலாமா
இவ்விடம் நிரந்தரமன்று நினையாமல்

பொன் பொருள் எதுவும் உடன்வராது
ஆடை அணிகலனும் தொடர்ந்திடாது
என்பதுவும் இவர்க்கிங்கே தெரியாதோ
தெரிந்தவரும் செய்தாலது எதனாலோ

இவரை சொல்லியும் ஒரு குற்றமுண்டோ
இவரும் அவரையன்றோ தொடர்கின்றார்
அவருக்கே ஆடை அணிகலன்கள் என்றும்
ஆனந்தமாயிருக்க பல இடங்களிருக்க

ஆறடிநிலம் நமக்கிங்கு சொந்தமென்றார்
நிரந்தர இடமங்கு உண்டெனச் சொன்னார்
இவரை இங்குள்ளோர் ஏமாற்றி நின்றாலும்
இவரெவரும் ஏமாறாதிருத்தல் காண்பீரோ!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *