கவிதைகள்
காத்திட வேலை ஏந்தி கந்தனாய் அமைந்த தெய்வம் !…. ( கவிதை …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கந்தசஷ்டி சிறப்புத் துதி 6 ம் நாள்!…
ஆதியாய் நடுவும் ஆகி
அளவிலாப் பொருளும் ஆகி
சோதியாய் நிற்கும் தெய்வம்
சுருதியாய் ஆன தெய்வம்
காதலாய் பரவி நின்றால்
கருணையை ஈயும் தெய்வம்
காத்திட வேலை ஏந்தி
கந்தனாய் அமைந்த தெய்வம் !
கலியுகம் போற்றும் தெய்வம்
காலனை விரட்டும் தெய்வம்
நிலையினை இழக்கா வண்ணம்
நிம்மதி நல்கும் தெய்வம்
ஒருதரம் நினைத்தால் போதும்
உயர்வினை அளிக்கும் தெய்வம்
அருவுரு ஆன தெய்வம்
அகிலத்தில் கந்தன் அன்றோ !
![]()