கவிதைகள்
சரவணப் பொய்கை தோன்றி சன்மார்க்கம் தளைக்க வந்தார்!…. ( கவிதை ) …… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கந்தசஷ்டி சிறப்புத் துதி 5 ம் நாள்.
கங்கையைச் சடையில் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
திங்களைச் சூடிக் கொண்டார்
திரு விளையாடல் செய்தார்
தந்தையாய் அமைந்த போதும்
தலைமையாய் இருந்த போதும்
எந்தையின் ஆசான் ஆகி
இருந்ததும் கந்தன் அன்றோ ! 
ஊமையைப் பேச வைத்தர்
உலகினை வலமும் வந்தார்
பாவலர் சபையின் முன்னே
விளக்கமும் கொடுத்து நின்றார்
பிரமனைச் சிறையில் இட்டார்
பெருங் கர்வம் அடக்கிநின்றார்
சரவணப் பொய்கை தோன்றி
சன்மார்க்கம் தளைக்க வந்தார் !
![]()