கவிதைகள்

நின தடியைப் பற்றுகிறோம் நீ அருள்வாய் திருமுருகா!…. ( கவிதை ) கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

கந்தசஷ்டி துதி  4 ம் நாள்!….

 

நினைப்பவர் நெஞ்சில் கந்தன்
    நீக்கற நிறைந்தே நிற்பான்
அடைக்கலம் என்றால் வேலன்
    அறுமுகம் அருளைக் காட்டும்
திருப்புகழ் கேட்கக் கந்தன்
     திருப்பினான் வாழ்வை என்னும்
கருத்தினை மனத்துள் வைத்தால்
     கந்தனே தருவான் காட்சி   ! 
 
ஈராறு கரத்தைக்  கொண்டாய்
     ஏங்குவார் துயர் துடைப்பாய்
 கூர்வேலை  யெடுத்துக் கையில் 
     கொடுமைகள் கொன் றொழிப்பாய்
 நீராறும் கடல் உடுத்த
      நீள் உலகை காக்கவையா 
நின தடியைப் பற்றுகிறோம்
     நீ அருள்வாய் திருமுருகா  !

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *