கவிதைகள்
பவவினை பறந்து போக பற்றுவோம் கந்தன் பாதம்!…. ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

கந்தசஷ்டி சிறப்புத்துதி !…. 3ம் நாள்.
ஆணவம் ஓங்கும் வேளை
அகமதில் இருளே சூழும்
அசுரராய் ஆகி வாழ்வில்
அறமதை அழிப்பார் நாளும்
அரனது மைந்தன் கந்தன்
நினைவதை அகத்திற் கொண்டால்
அசுரரும் அமரர் ஆவர்
ஆணவம் அழிந்தே போகும் ! 
வரமினை வேண்டு வார்க்கு
வளங்கியே நிற்பான் கந்தன்
கரமினைக் கூப்பி நின்றால்
கையினைக் கொடுப்பான் கந்தன்
முரணினைக் கொண்டு நின்றால்
மூர்க்கத்தை அழிப்பான் கந்தன்
பவவினை பறந்து போக
பற்றுவோம் கந்தன் பாதம் !
![]()