கவிதைகள்

நிம்மதி நிறையும் வாழ்வில்!…. ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

சஷ்டியை நோற்று நின்றால்
     சங்கடம் அகன்றே ஓடும் 
துஷ்டரும் பக்கம் வாரார்
      துன்மதி தொலைந்தே போகும்
இஷ்டங்கள் இணைந்தே வாழ்வில்
      இல்லமும் சிறந்தே ஓங்கும்
நிஷ்டையும் அமைந்தே நிற்கும்
      நிம்மதி நிறையும் வாழ்வில்  !             
 
ஓடிடும் மனமே நில்லு
     ஒருதரம் முருகன் நாமம்
நாடியே நவின்று பாரு
      நமனுமே அஞ்சி நிற்பான்
வாடிடும் நிலையும் போகும்
     வளமெலாம் வந்து சேரும்
நீடிடும் வாழ்வும் கிட்டும்
     நினைத்திடு முருகன் நாமம்  ! 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *