கவிதைகள்
எல்லாம் மாறிப்போச்சு!…. ( கவிதை ) ….. செ.துஜியந்தன்…. பாண்டிருப்பு

முகத்துக்கு முகம் பார்த்து
அடுத்தவர் கை குலுக்கி
அகம் மகிழ்ந்து
கட்டி அணைத்து
வாழ்த்துக்கள் சொன்ன காலம்
மலையேறிப் போனதென்ன?! 
பேஸ்வுக் வைபர்
வட்ஸ்அப் டூவிட்டர்
எஸ்.எம்.எஸ் என்று
வாழ்த்துக்கள் பதிவிட்டு
பக்கத்து உறவையும்
தூரத்து உறவுகளாய்
தள்ளி வைத்து வேடிக்கை பார்க்கும்
காலமென்றாச்சு!
வீட்டில்….
சுடச் சுட பலகாரம்
முறுக்கு சோகி
மூக்கை துளைக்கும்
வித விதமாய் இனிப்புக்கள்
அடுப்படியில் இருந்து
அம்மா சுட்ட காலம்
இப்போ மலையேறிப் போனதென்ன?!
கடையில் சுட்ட வடை
காலாவதியான லட்டு
முறுக்கு சோகி பக்கட் வாங்கி
பண்டிகை கொண்டாடும்
பகட்டான காலமாச்சு!
பண்டிகைச் சாமான்கள்
பக்கத்து வீட்டுக்கும்
பகிர்ந்துண்ணக் கொடுத்து
கூடி விருந்துண்ணும்
காலமும் மறைஞ்சு போச்சு!
கோடி கொடுத்தாலும்
அந்தக் கால பண்டிகை போல்
இந்தக் கால பண்டிகைகள் வருமா?!
![]()