கதைகள்

காதலர் விமானம்!…. 32 ….. ( நாவல் )…… ஏலையா க.முருகதாசன்.

குரு,சாகித்தியன்,சந்திரன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். சாந்தினி, சிவகாமி, அர்ச்சனா ஆகிய மூவரும் சற்றில் கொக் அடிப்பதை நிறுத்திவிட்டு.பள்ளிக்கூடத்தைச் சுற்றிப்; பார்க்கப்; புறப்பட்டனர்.மாமர நிழலில் ஓரமாக வடக்குப்புறம் நோக்கி நடந்து கொண்டிருந்தனர்.

திறந்தவெளி அரங்காக இருந்த மேடையில் மூவரும் ஏறி நின்றனர்.சாந்தினி முதன்முதலாக இன்றுதான் மகாஜனாக் கல்லூரிக்குள் வந்திருக்கிறாள்.மேடையில் நின்றவாறே இது ஒன்றுதான் புரோகிறாம் நடக்கிற மேடையா என்று கேட்க,இல்லை இன்னொன்றுமிருக்கு அது அங்கை இருக்கிற பில்டிங்கின் மேல் மாடியிலிருக்கிறது என்றாள் சிவகாமி.

படியைவிட்டு இறங்கி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்கள்.மேற்குப்புறமாக வகுப்புகள் வரிசையின் கடைசி அறையில் விளையாட்டுச் சாமான்கள் வைக்கும் அறைக்குள்ளிருந்து உதவியாளர் கிருஸ்ணபிள்ளை,நடந்து வந்து கொண்டிருந்த மூன்று பெண்களையும் பார்த்தவர் கதவு வாசலில் நின்றபடியே „யார் இது சொந்தக்காரியா,உங்கடை முகச்சாயலில் இருக்கிறா’ என்று கேட்க, „இவ எங்களுக்குத் தெரிஞ்சவ,சுண்ணாகத்திலை இருக்கிறவை அங்கை அண்ணையோடை பந்தடிச்சுக் கொண்டு நிற்கிறவை இரண்டு பேரும் இவாவின்ரை அண்ணன்கள்’ என்றவளிடம்,இவை எங்கை படிக்கிறவை என்று படியைவிட்டு இறங்கியபடியே கிருஸ்ணபிள்ளை கேட்க,ஸ்கந்தாவிலை இவையெல்லாரும் ஸ்கந்தாதான் என்று சொன்னவுடன், கிருஸ்ணபிள்ளை சிரிக்க „ஏன் ஸ்கந்தா என்றவுடன்; சிரிச்சனீங்கள்’ என்று சாந்தினி கேட்க, „ஒன்றுமில்லை எங்களுக்கும் உங்களுக்கும் புட்போலிலை எப்பவும் பிரச்சினை அதுதான் யோசிச்சன் சிரிச்சன்’

என்றவர் வாற புதன்கிழமை உங்களுக்கும் பரமேஸ்வராக்கும் பரமேஸ்வரா மைதானத்திலை மாச் இருக்குது,பரமேஸ்வரா இந்த வருசம் நல்ல ரீம் என்று கதைக்கினம், வாற புதன் கிழமை மாச் நல்லாயிருக்குமென்று நினைககிறன், நான் போறன் சந்திரனும் வருவாரென்று நினைக்கிறம்’ என்று கிருஸ்ணபிள்ளை சொல்ல „நாங்கள் மூன்று பேரும் வருவம் „ என்று சொன்னவுடன், வான் கண்ணாடியைத் திருத்தினால் எல்லாரும் போகலாம் கிட்டிணன்னை அதைத் திருத்துவாரோ தெரியாது என்றவர்,கண்ணாடி உடைஞ்ச கதை தெரியுந்தானே, உடைஞ்ச கண்ணாடித் துண்டு ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ரை நெற்றியிலை வெட்ட, கொண்ணர் ஓடிப் போய் கட்டிவிட்டதும் இப்ப அரசல் புரசலாக ரீம் மட்டத்திலை ஒரு கதை நடக்குது என்றவுடன், சிவகாமி சாந்தினிக்குத் தெரியாமல் கிருஸ்ணபிள்ளையைப் பார்த்து தனக்கு வலது புறத்தில் நின்ற சாந்தினியை ஆள்காட்டி விரலால் காட்டி அவ இவதான் என்று கண்ணாலை ஜாடை காட்ட கிருஸ்ணபிள்ளை „மச்சாள்…..என்று வாயெடுத்தவர், ஏன் வீண் வம்பு என்று பந்தடிச்சுக்; கொண்டிருந்தவர்களை நோக்கி நடக்க „புதன்கிழமை நாங்கள்தான் வெல்வம்’ என்று சாந்தினி சொல்ல, „அதுவும் நல்லதுதான்’ என்று சொல்லியபடியே அவர் நடக்கிறார்:.

கிருஸ்ணபிள்ளைக்கு மகாஜனாவில் யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்ற விபரம் அத்துப்படி.அவர் ஆசிரியர்கள் மட்டத்திலும் பழகுபவர் மகாஜனாவின் எல்லா விளையாட்டுத்துறை சம்பந்தப்பட்டவர்கள் மத்தியிலும் பழகுபவர்கள்.

என்னதான் ஆசிரியர்கள் கண்ணுக்குள் எண்ணையை விட்டுக் கண்காணித்தாலும் ஒரு வயதுக்கு மேல் கல்வியும் காதலும் ஒன்றாகப் பயணிக்கும்.

விளையாட்டுத்துறையிலிருக்கும் பெண்கள் மீதோ ஆண்கள் மீதோ ஒரு ஈர்ப்பு வந்து அது காதலாக மாறி நிற்கும்.தன்னுடைய காதலன் அல்லது தனக்கு விருப்பமானவன் உதைபந்தாட்ட வீரனாக இருந்து போட்டிகளில் கோல் அடித்துவிட்டாள்,யாருக்கும் தெரியாமல் சொக்லேட் வாங்கி வைத்து அந்தச் சொக்லேட்டை லேஞ்சியால் மறைத்துப் பிடித்துக் கொண்டே எதிரே வரும் காதலனுக்க ஜாடை காட்டி கையிலிருப்பதை எடு என்பது போல எதிரெதிரே விலத்தும் போது இலாவகமாக சொக்லேட்டைக் கையிலெடுக்கும் நுட்பமிருக்கிறதே காதலர்களுக்கு என்று பாடமிருந்தால் அதற்கு இவர்களையே ஆசிரியர்களாக நியமிக்கலாம்.

ஆசிரியர்கள் தங்கி ஓய்வெடுக்கும் அறையிலிருநது சுந்தரராஜன் ரீச்சர் சாப்பாட்டு இடைவேளையின் போது தண்ணீர் குடிக்க பைப்படிக்கு போய்வரும் மாணவ மாணவிகளை நோட்டம் விட்டாலும்,அவரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு தில்லாலங்கடி வேலை செய்வதில் மாணவர்கள் கில்லாடிகள்.

கைமாறுவது சொக்லேட்டுக்கள் மட்டுமல்ல காதல் கடிதங்கள்,லேஞ்சிகளுந்தான்.இதைவிட கொம்பாஸ் பெட்டிக்குள் காதல் கடிதங்களை வைத்துவிட்டு இடைவேளை நேரம் தண்ணீர் குடிக்கப் போகும் போது தனது காதலியை திரும்பிப் பார்த்து கொம்பாஸ் என்று சொல்ல, நீ வரேலையா கண்ரீனுக்கு என்று மாணவிகள் கேட்க,தலையிடியாயிருக்கு நான் வரேலை என்று பொய் சொல்லி மேசையில் தலைவைத்து படுத்தபடி ஓரக் கணணால் பார்த்து அவர்கள் சென்றதும் வேகமாக சென்று கொம்பாஸைத் திறந்து அந்தக் கடிதத்தை எடுத்து விடுவதும் நடக்கும் ஒன்று.கைமாறிய பொருளைக் கண்டாலும் காணாத மாதிரி கைமாற்றியவளை „இங்கை வா’என்று கூப்பிட்டு,நுட்பத்தை படிப்பிலும் காட்டு என்று சுந்தரராஜன் ரீச்சர் சொல்ல ஓம் ரீச்சர் என்று சொல்லிக் கொண்டே கண்டிட்டாரடி என்று மாணவிகளுக்குச் சொல்லிக் கொண்டே போவாள் சொக்லேட் கொடுத்த மாணவி.

மகாஜனாவின் காதல் வட்டத்தைஅறிந்த இன்னொருவர் கண்ரீன் சங்கரப்பிள்ளை,அறிந்த அதே தகவல்களை அவருக்கு பிடித்த

ஆசிரியர்களுக்கு சொல்லிவிடுவதும் உண்டு.பாஸ்கட் போல் விளையாட்டில் வெற்றி பெறுவதற்கு காரணமாக இருக்கும் மாணவிக்கு கண்ரீனில் அவளின் காதலன் விருந்துக்கு ஏற்பாடு செய்வதே தனி ரகம்.ஏற்கனவே கண்ரீன் சங்கரப் பிள்ளையிடம் அவள் கேட்கிற எல்லாவற்றையும் கொடுக்கச் சொல்லி அவன் காசைக் கொடுத்துவிட்டுப் போக கண்ரீனுக்கு வரும் அந்த மாணவிக்கு தனது கண்ரீனிலிருக்கும் அத்தனையையும் தட்டில் எடுத்து வைத்துக் கொடுக்க இத்தனைக்கும் காசுக்கு எங்கை போக என்று மாணவி கேட்க காசு வேண்டாம் சாப்பிடுங்கோ என்று சொல்ல,தோழிகளுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டுப் போய் „யாரண்ணை இந்த ஏறபாடலெ;லாம் செய்தது என்று கேட்க „ உனக்கு யாரிடம் விருப்பம் இருக்கிறதோ அவர்தான் என அவர் சொல்ல,கண்ரீனைவிட்டு படியிறங்க அப்பொழுதுதான் எதுவுமே தெரியாதது போலவும்,தனக்கு விருப்பமானவளைக் கவனிக்காதது போல படியேறும் அவனுக்கு ரீட்டுக்கு நன்றி என்று மெதுவாக சொல்லிவிட்டு அவள் சொல்ல, நாளைக்கு மாவிட்டபுரம் பின்னேரத் திருவிழாவில் காத்திருப்பேன் என்று அவன் சொல்ல „ம்’என்று சொல்லிக் கொண்டே அவள் போவாள்.

சாந்தினி இன்றுதான முதன்முறையாக மகாஜனாவுக்கு வருகிறதாள்.அதன் பிரமாண்டமும், வடிவமைப்பும் அவளைத் திகைக்க வைக்கின்றது.

கிழக்கு நோக்குp சாந்தினி, சிவகாமி, அர்ச்சனா நடந்து வந்து நடராஜர் கோவிலைக் கும்பிட்டுவிட்டு தெற்குநோக்கி நடக்கத் தொடங்குகிறார்கள்.

சாந்தினிக்கு முள்ளுக் குத்தி, முள் எடுத்த பின்பும், பாதம் நோகவே தாண்டித் தாண்டி நடந்து கொண்டிருந்தாள்.இவர்களுக்கு கதை சொல்லிவிட்டுப் போன கிருஸ்ணபிள்ளை மூவருடனும் சேர்ந்து பந்தடித்துக் கொண்டிருக்கிறார்.

கிருஸ்ணபிள்ளை „ மச்சாள்…..’ என்று சொல்ல வாயெடுத்து சொல்லாமல் விட்டதற்குக் காரணம்.உதைபந்தாட்ட வீரர்கள் மட்டத்தில் ஸ்கந்தாவில் உயர்தர வகுப்பில் கடைசி வருடத்தில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பொம்பிளைப் பிள்ளையைச் சந்திரன் விரும்புகிறான் என்ற செய்தி உதைபந்தாட்ட வீரர்கள் மட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் ஒரு செய்தி.

எப்பொழுதும் கலவன் பாடசாலையில் மாணவர்கள் நன்றாகப் படிப்பார்கள் என்று சொல்வார்கள்.அது உண்மைதான் மாணவனுக்கு மாணவியின் பார்வையும் மாணவிக்கு மாணவனின் பார்வையும் தெம்பைக் கொடுக்கும் என்பதும் உண்மைதான்.

கிருஸ்ணபிள்ளை சொன்ன மச்சாள் என்று வாயெடுத்தது.சிவகாமியின் மச்சாள் என்று சொல்லத்தான்.கிருஸ்ணபிள்ளை எல்லாரையும் விட கில்லாடிதான்.தெரிஞ்சு கொண்டே நடக்கட்டும்……நடக்கட்டும் நல்லது நடக்கட்டும் என்பவர்.

மைதானத்தின் தொங்கலுக்கு வந்த மூவரும் விளையாடிக் கொண்டிருந்த நால்வரையும் பார்க்க அவர்களில் சந்திரன் திரும்ப „ நாங்கள் வீட்டை போறம்’ என்று பாற்றால் காட்டிவிட்டு அவர்கள் போய்க் கொண்டிருக்கின்றனர்.

கிருஸ்ணபிள்ளை பந்தடிப்பது போலச் சந்திரன் பக்கம் போய் „ என்ன உங்கடை ஆள் வீட்டுக்கே வந்திட்டாப் போல’ என்று சொல்ல,பேசாமல் இருங்கள் என்று மெதுவாகச் சொல்லிவிட்டு எதுவுமே நடக்காத அப்பாவி போல பந்தடித்துக் கொண்டிருந்தான் சந்திரன்.

அர்ச்சனா தன் வீட்டுக்குப் போக, சிவகாமியும் சாந்தினியைக் கூட்டிக் கொண்டு தங்களுடைய வீட்டுக்குப் போகிறாள். வீட்டுக்குள் நுழைந்த சாந்தினி „மாமி வியர்வை நசு நசு என்றிருக்குது நான் குளிக்கட்டா’ என்று கேட்க „குளி பிள்ளை குளிச்சிட்டு, சிவகாமியின்ரை உடுப்பைப் போடலாம் என்று சொல்லியவள் „ சிவகாமியிடம் உன்னட்டை இருக்கிற உடுப்புக்களில் பிள்ளைக்கு அளவான உடுப்புகளை எடுத்துக் கொடு என்று சொல்ல,சிவகாமி தனதுறையில் உள்ள அலுமாரியை திறந்து பார்த்து எடுங்கோ என்கிறாள்.

பின்னேரத் தேநீருக்கு மகேஸ்வரி உழுந்து வடையும் அதற்கு உவப்பாக பச்சைமிளகாய் தேங்காய்ப்10 போட்ட சம்பலும் செய்து வைக்க,குளித்து உடை மாற்றி அடுப்படிக்குள் நுழைந்த சாந்தினியை ஏற இறங்கப் பார்த்து மகேஸ்வரி சிவகாமியின்ரை உடுப்பு உனக்கு நல்லா அளவாயிருக்கு பிள்ளை சரி வடையைச் சாப்பிட்டு தேத்தண்ணியைக் குடி என்று எடுத்து வைக்க, „மாமி மகாஜனா பெரிய பள்ளிக்கூடம் மாமி’ என்கிறாள்

அது சரி எங்கை அண்ணாக்களையும் சந்திரனையும் காணலை,அவை பந்தடிச்சுக் கொண்டிருக்கினம் என்று பதில் சொன்ன சாந்தினி இரண்டு வடையையும் தேநீரையும் குடித்துவிட்டு „மாமி ககால் நோகுது கொஞ்ச நேரம் சிவகாமியின்ரை கட்டிலிலை படுக்கட்டா என்று கேட்டவள் பதிலுக்கு காத்திருக்காமல் உரிமையோடு போய்ப் படுக்கிறாள்.

கால்நோ ஒரு புறமும் சற்றில்கொக் விளையாடிய அலுப்பு ஒரு புறமுமாக இருந்து சாந்தினி நித்திரையாகிவிட்டாள்.குளித்துவிட்டு வந்த சிவகாமி அறைக்குள் போக அங்கே தனது கட்டிலில் ஒரு பக்கம் சரிந்து நித்திரை கொண்ட சாந்தினியைக் கண்டவள் கடவுள் இவளுக்கு அழகை அள்ளிக் கொடுத்திருக்கிறானே, பாவாடை இரண்டு பாதங்களுக்க மேல் விலகியிருக்க கால்சங்கிலிகள் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவள், எனக்கு அண்ணியாக இவள் வந்தால் நாலுபேர்கூடும் சபையில் நாங்கள் பெருமையுடன் நிற்கலாம் என்று உள்ளுக்குள் சநதோசப்பட்டவள் அண்ணை முற்பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேணடும் என்று நினைத்தவள் என்ன நினைத்தாளோ தெரியாது வீட்டுப்படி இறங்கி முற்றத்தில் இருந்த கனகாம்பரச் செடியிலிருந்து பூக்களை பிடுங்கிக் கொண்டு போய் அடுப்படிக்குள் இருந்து சரம் கட்டத் தொடங்கினாள்.

இரவுச் சாப்பாட்டுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்த மகேஸ்வரி „என்ன இந்த நேரத்திலை பூச்சரம் கட்டிறாய் என்று கேட்க „அண்….’என்று வாயெடுத்தவள்’அவாவுக்குத்தான்’ என்றவளை வியப்புடன் பார்க்கிறாள் தாய்.

எப்ப பார்த்தாலும் அவளைக் குறை சொல்லிக் கொண்டிருந்தவளா அவளுக்கு சரம் கட்டுவதை மகேஸ்வரியால் நம்ப முடியவில்லை.உள்ளுக்குள்ளை வெறுக்கிற மாதிரி நடிக்கிறாளோ.இது அழகான பெண்களுக்கிடையில் நடக்கும் விசயந்தான்.

சாந்தினிக்கு முள்ளை எடுத்துவிடு என்று மகனைக் கூப்பிட்டால் அவன் வேண்டா வெறுப்பாக முள் எடுப்பது போல முள் எடுக்கேக்கிலை நான் கவனித்தனான்தானே அவை இரண்டுபேற்றை கண்களின் நாடகத்தை. நானும் இவையின்றை வயதைக் கடந்து வந்தவள் என்பதோ நான் நடத்திய கூத்தை இவை அறியவில்லை என்று மனதுக்குள் சிரித்தபடி இரவுச் சாப்பாட்டைச் செய்து கொண்டிருந்த மகேஸ்வரி „சிவகாமி வெளியிலை பார் மழை வருகுதோ’ என்றவள் இன்று நடக்காதது எல்லாம் நடக்குது அதுதான் கேட்டனான் என்றகிறாள்.

„அம்மா நக்கல் விடாதை,எனக்கும் விளங்கும் நீங்கள் என் கேட்கிறியள்’ என்ற போது சரத்தைக் கட்டி முடித்துவிடுகிறாள்.

கட்டிய பூச்சரத்தை எடுத்துக் கொண்டு அறைக்குள் சிவகாமி போக,நித்திரை முடிந்து எழும்பின சாந்தினி தலைகணியொன்றை நிமிர்த்திப் போட்டபடி புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறாள்.

உள்ளே போன சிவகாமி, கனகாம்பரப் பூச்சரத்தை மேசையில் வைத்துவிட்டு,கொஞ்சம் எழும்பி நிற்கிறியளா என்றவள் எழும்பி நின்ற சாந்தினியைத் திரும்பச் சொல்லி குழம்பி இருந்த தலையை சீப்பால் இழுக்கத் தொடங்கியதைப் பார்த்த சாந்தினி என்ன விந்தை நடக்குத என்று கையை கிள்ளிப் பார்க்க கண்ணாடியில் அதைப் பார்த்த சிவகாமி இது கனவல்ல நிஜந்தான் என்று சொல்லிவாறு இழுத்து கிளிப்பை எடுத்து குத்திவிட்டு அதில் கனகாம்பரத்தை அழகாக செருகி விடுகிறாள்.

மகிழ்ச்சியான முகத்துடன் திரும்பிய சாந்தினி சிவகாமியை உற்றுப் பார்க்கிறாள். நீங்கள் பூச்சரம் வைக்கவில்லையா என்று கேட்க,’இல்லை நான் வைக்கேலை நீங்கள் விருந்தாளி என்று சமாளிக்கிறாள்.

உண்மையில் சாந்தினிக்கு தலை இழுத்து கனகாம்பர பூச்சரம் வைத்து சாந்தினியை கற்பனையில் தமையனுக்கு அருகில் வைத்துப் பார்க்கிறாள்.வெளியில் காட்டிக் கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள்ளை பெருமையடைகிறாள்.

அறையைவிட்டு வெளியே வந்து அடுப்படிக்குள் நுழைந்த சாநதினி „மாமி நல்ல வெயிலடிக்குது மழை வரும் போல தெரியுது „என்கிறாள்.நானும் அப்படித்தான் நினைக்கிறன் மருமோளே என மகேஸ்வரி குதூகலித்துச் சொல்கிறாள்.

„ ஆ போதும் இரண்டு பேரும் நக்கலடிச்சது „ என்று சொல்லிக் கொண்டே வடையைச் சாப்பிட்டு தேநீரைக் குடித்துக் கொண்டிருந்த சிவகாமி’ அம்மா

உங்கடை மருமோள் வடை சாப்பிட்டு ரீ குடிச்சிட்டாவோ’என்று கேட்க „நீயல்லோ சாப்பிட முந்திக் கேட்டிருக்க வேணும் ,பிள்ளை சாப்பிட்டு தேத்தண்ணியும் குடிச்சுட்டா என்கிறாள் மகேஸ்வரி.

மகாஜனா மைதானத்திலிருந்து வெளியே வந்து கேட்டை நோக்கி மூவருடன் கிருஸ்ணபிள்ளையும் நடந்து வந்து கொண்டிருந்த போது சாகித்தியன் இடது புறத்தில் உள்ள ரோஜாச் செடிகளில் பூத்திருக்கும் சிவப்பு ரோஜாப் பூக்களை பார்த்துவிடுகிறான்.

OLYMPUS DIGITAL CAMERA

கிருஸ்ணபிள்ளை இருந்த பக்கம் திரும்பி,இரண்டு மூன்று பூக்களைப் பிடுங்கித் தர முடியுமா என்று கேட்க, „ முறைக்கு பிடுங்கக்கூடாது, ஆனால் நீங்களும் தெரிஞ்சனீங்களாகிவிட்டியல் „ என்று சொல்லியபடி தன்னிடமிருந்த வில்லுக்கத்தியால் மூன்று சிவப்பு ரோஜாப் பூக்களை காம்புடன் வெட்டிக் கொடுக்க நன்றி என்று சொல்லி வாங்குகிறான் சாகித்தியன்.

கேட்டுக்கு வெளியே வந்த நால்வரில் கிருஸ்ணபிளளை லிங்கம் கபேயை நோக்கி நடக்க,மற்றைய மூவரும் கிழக்குப் பக்கமாக சந்திரன் வீட்டை நோக்கி நடக்கின்றனர்.’இப்ப உனக்கு ஏன் ரோஜாப்பூ என்று குரு கேட்க அம்மாவுக்கு ரோஜாப்பூ விருப்பம் அம்மாவுக்கு குடுக்கத்தான் என்கிறான் சாகித்தியன்.

வீட்டுக்குள் ஏறிய சாகித்தியன் அடுப்படி வாசலோடு இருந்த மேசையில் ரோஜாப் பூக்களை வைத்துவிட்டு தமையனுக்குப் பக்கத்தில் இருந்த சாய்வு பிரம்புக் கதிரையில் உட்காருகிறான்.

பந்தடித்து விளையாடியதால் மூவருக்குமே வியர்த்து ஒழுகியதால் குளிப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த சந்திரனிடம் „வீட்டிலை போய்க் குளிச்சால்தான் நிம்மதியாகவிருக்கும் என்று குரு சொல்ல, இங்கேயே குளிக்கலாமே போடுறதுக்கு நான் சேர்ட் தருகிறன் நீங்கள் இரண்டு பேரும் போய் முதலிலை குளியுங்கள் என்று சந்திரன் சொல்ல ஒருவர் பின் ஒருவராக குளிக்கப் போகின்றனர்.

 

சந்திரன்,குரு,சாகத்தியன் வீட்டுக்கு வந்துவிட்டதையம் அவர்கள் மூவருமே குளிக்கப் போகிறார்கள் என்பதையும், சந்திரனின் சேர்ட்டுக்களைப் போடப் போகிறார்கள் என்பதையும் அவர்கள் கதைத்ததை வைத்து மகேஸ்வரி,சாந்தினி, சிவகாமி அறிந்து கொள்கின்றனர்.

 

சாந்தினிக்கு நித்திரைத் தூக்கம் முழுவதும் போகவில்லை என்பதால் மேசையில் முழங்கையை வைத்து கன்னத்தில் கையை வைத்தபடி கதிரையில் உட்கார்ந்திருந்தவள்’மாமி மத்தியானம் சாப்பிட்டதே அப்படியே இருக்கு,அதுக்குள்ளை இரவுச் சாப்பாடு செய்யிறியளோ „ என்று சொல்ல, அதுவெல்லாம் இப்ப செமிச்சுடும், கல்லைச் சாப்பிட்டாலும் செமிக்கிற வயது உங்கடை வயது என்று சொல்லிக் கொண்டே சமையலில் ஈடுபடுகிறாள் மகேஸ்வரி.

 

முழங்கையை கன்னத்தில் வைத்திருந்த சாந்தினிக்கு நித்திரை வந்ததால் எழுந்து கதிரை ஒன்றை எடுத்து மேசையிருந்த சுவரோடு போட்டு சுவரில் சாய்ந்து நித்திரை கொள்ளத் தொடங்கினாள்.

 

தலையை இழுத்து கிளிப் குத்தியபடி தனதறையை விட்டு வெளியே வந்த சிவகாமி அடுப்படி வாசல் மூன்று சிவப்பு ரோஜாக்களைக் கண்டதும் தமையன்தான் கொண்டு வந்து வைத்திருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு இரண்டு பூக்களை சிறுது காம்பு இருக்கத்தக்கதாக கிள்ளி எடுத்து தலையில் செருகிக் கொண்டு அடுப்படிக்குள் நுழைகிறாள்.

 

சிவகாமியின் தலையில் ரோஜாப் பூக்களைக் கண்ட தாய்’ யார் பூ தந்தது என்று கேட்க , அண்ணைதான் கொண்டு வைத்திருப்பர் என்று நினைக்கிறன் „ என்கிறாள் சிவகாமி.

 

சாந்தினி ஆழ்ந்த உறக்கத்துக்கும் கோழித்தூக்கத்துக்குமிடையிலான நித்திரையில் அமிழ்ந்திருக்க அடுப்படிக்குள் நுழைந்த சந்திரன்.தலைமயிரை மார்பில் தவழவிட்டு அதன் மேல் படர்ந்தது போல நிற்கும் கனகாம்பரச் சரத்துடன் நிற்கும் சாந்தினியைப் பார்த்தவன் வைத்த கண் எடுக்காமல் கவனித்துக் கொண்டிருக்க,’அம்மா இங்கை ஒரு பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்குது’ என்று சாந்தினியைப் பார்த்துக் கொண்டே நிற்கும் தமையனையைத் தாய்க்குக் காட்டுகிறாள்.

 

ஆழ்ந்த தூக்கமல்லாத தூக்கம் எதுவுவென்றால்.நித்திரை கொள்பவர்களுக்கு அவர் முன்னால் நின்று பேசுபவர்களின் குரல் கேட்கும். அவர்களுக்குப் பதில் சொல்வதாக நினைத்துக் கொண்டே உண்மை கலந்த பொய்யைச் சொல்வார்கள்.மது அருந்தியவர்கள் கொஞ்சம் அதிகமாக அருந்தினாலும் போதைக்கும் இயல்பு நிலைக்குமிடையில் இருப்பார்கள். இவர்கள் நித்திரை கொள்ளும் போது,யாராவது ஒருவருக்கொருவர் கதைத்துக் கொண்டால் கொஞ்சம் உண்மையும் பொய்யும் கலந்து உளறிப் பதில் சொல்வார்கள்.

 

சந்திரன் குசும்புத்தமனமாக „இவ என்ன காத்திலை தானாகப் போகிற சற்றில்க் கொக்கை அடிச்சுப் போட்டு பாட்மிண்டன் விளையாடிக் களைச்சமாதிரி நித்திரை கொள்கிறா என்றவுடன் கண்ணை மூடிய நிலையில் „ அது எனக்குக் களையில்லை நொண்டி நொண்டி கிரவுண்டைச் சுத்தி வந்ததுதான் களை’ எனச்

சொல்ல „ அதுதான் முள்ளை எடுத்தாச்சே’என அவன் அவளைக் கூர்ந்து கவனித்தபடியே சொல்ல, „என்னம்மா இவ நித்திரையில கதைக்கிறா என தாயைப் பார்த்து சந்திரன் கேட்க „முள்ளை எடுத்தது சரி என்னையே முழுநேரமும் பார்த்துக் கொண்டே முள்ளு இருந்த இடத்தை விட்டிட்டு மற்ற இடமெல்லாம் குத்தினதை மறந்திட்டீங்களா’ என்றுவுடன் தாய்க்கு சிரிப்பு வர, „அடக் கடவுளே நான் மட்டுமே பார்த்தேன், வைச்ச கண் வாங்காமல் என்னைப் பார்த்திட்டு போததற்கு சூடான மூச்சுக் காற்றை என்ரை நெஞ்சிலை படத்தக்கதாக விட்டிட்டு இப்படிச் சொல்கிறாளே,நாளைக்கு இவள் பெண்சாதியாக வந்தாள் இவளைச் சமாளிக்கிறது கஸ்டந்தான் என பேசாமலிருந்தான்.

நித்திரையிலிருந்து கண் விழித்த சாந்தினி, „மாமி நான் கனநேரம் நித்திரை கொண்டிட்டனோ’ என்று கேட்க „ச்சா கனநேரமில்ல’ தாய் பதில் சொல்ல இவள் இவ்வளவு நேரமும் தெரிஞ்சு கதைச்சாளா தெரியாமல் கதைச்சாளா எனத் தடுமாறினான் சந்திரன்.

அடுப்படியை எட்டிப் பார்த்த சாகித்தியன்’ சந்திரன் இந்த மேசையிலை மூன்று ரோஜாப்பூக்கள் வைச்சனான், அதிலை இரண்டைக் காணவில்லை எங்கையாவது கண்டனீங்களோ „ என்று கேட்க, சாகித்தியன் கொண்டு வைத்த பூக்களைத் தமையன் கொண்டு வந்து வைத்ததாக எண்ணித் தலையில் வைத்திட்டேனே என நாக்கைக் கடித்த சிவகாமியின் தலையைப் பார்த்த சாந்தினி „சின்னண்ணை எங்கை போய் பூச்சேர வேண்டுமென்று வைச்சியோ அது அங்கை போய்ச் சேர்ந்திட்டுது அம்மாவுக்கு என்று என்ரை காதில பூ வைக்காதை’ என்று சொல்ல சுவரோடு நின்று சிவகாமி சாகித்தியன் பார்க்கத்தக்கதாக முன்னுக்கு வந்து இங்கை இருக்குது என்று விரலால் தலையைக் காட்டுகிறாள்

பரவாயில்லை என்பது போல கண்களால் பதில் சொல்லிவிட்டு சாகித்தியன் குருவுக்கு பக்கத்தில் போய் உட்காருகிறான்.சந்திரனும் அவர்களுக்கருகில் உட்காருகிறான்.ரீப்போவில் கிடந்த வீரகேசரிப் பத்திரிகையை வாசித்துக் கொண்டிருக்கிறான் குரு.

„மாமி இஞ்சை என்ன நடக்குது’ என்று சாந்தினி கேட்க „புட்டவிச்சுக் கொண்டிருக்கிறன்’ என்று மகேஸ்வரி பதில் சொன்னாலும் சிவகாமி தலையில் வைத்த பூ இருக்கிறதைத்தான் சொல்கிறாள் எனபதை ஊகித்துக் கொள்கிறாள்.

சந்திரன்,சாகித்தியன், குரு என எல்லாரும் விறாந்தையில் வீட்டைப் பார்த்தபடி இருக்க, சாந்தினி அவர்களுக்கு முன்னால் வந்து சுவரோடு சாய்ந்து நிற்கிறாள்.

சிவகாமி மூன்று தட்டில் வடை சம்பல், தேநீர் கொண்டு ஒவ்வொருக்கும் கொடுத்தவள் சாகித்தியனை மட்டும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே கொடுக்கிறாள்.

சுவரோடு சாய்ந்து நின்ற சாந்தினி,மெதுவாக தரையில் உட்கார்ந்திருக்க „ உங்களுக்கு வடை கொண்டு வந்த தரவா’ என்று சிவகாமி கேட்க „ம் ஒன்று போதுமென அவளும் கொண்டு வந்து கொடுக்கிறாள்.

„மத்தியானம் நல்ல சாப்பாடு போதாதற்கு இப்ப வடை சொல்வழி கேளாமல் மாமி இரவுச் சாபபாட்டுக்கு புட்டவிக்கிறா என்று சொன்ன சாந்தினி’மாமி ஏதாவது உதவி செய்ய வரவா „என அடுப்படிப் பக்கம் திரும்பி பார்த்துக் கேட்க’ ஒன்றும் வேண்டாம் நீங்கள் கதையுங்கள் „ என்ற மகேஸ்வரிக்கு „சரி மாமி „ என்று சொல்லிவிட்டு மூத்த தமையனைப் பார்த்த சாந்தினி அவன் அடிக்கடி கேற்பக்கம் திரும்பிப் பார்ப்பதைக் கண்டதும் „பெரியண்ணா என்ன அடிக்கடி கேற்பக்கம் பார்க்கிறியள் , யாராவது வாறமெண்டு சொன்னவையோ’ என்று

கேட்க, அரச்சனாவின் கன்னக்குழியை சைகையால் காட்டுவது போல தனது கன்னத்தில் விரல் ஒன்றால் குழி போல அமத்துகிறாள்.

மெதுவாக எழுந்த சாந்தினி எதேச்சையாக இருப்பது போல வெறுமையாக சந்திரனுக்கு பக்கத்திலிருந்த கதிரையில் உட்கார,திரும்பிப் பார்க்க கடைசியாக இருக்கும் மூத்த தமையனை கண்களால் ஜாடை காட்டி கன்னத்தில் விரலால் குழி போல அமர்த்திக் காட்ட அவனும் தெரியும் என்பது போல சுவரைப் பார்த்து தலையாட்டுகிறான்.

அர்ச்சனா வரமாட்டாளா என கேற்றடியைப் பார்த்துக் கொண்டே இருப்பதை புரிந்து கொண்ட சாந்தினியும் சந்திரனும் தமக்குள் சிரித்துக் கொள்கின்றனர்.

சாந்தினி,சிவகாமி, குரு சாகித்தியன் ஆகிய மூவரும் காதலில் விழுந்துவிட்டமையினால் ஒருவருக்கொருவர் காதலுக்கு எதிரான புத்திமதி சொல்ல முடியாத நிலையில் இருந்தனர்.

தமையனும் சாந்தினியும் அருகருகே இருந்து சிரித்துப் பேசியதைக் கண்ட சிவகாமி தாயாரைக் கூப்பிட்டுக் காண்பிக்க, தாயார் அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி தனது வேலையில் ஈடுபட „ நீங்கள்: கலயாணத் தரகர் வேலையில் ஈடுபட்டிருக்கலாம்’ என்று சொன்னதும்,சிவகாமி நானும் உன் வயதைத் தாண்டித்தான் வந்தவள்,நானும் அப்பாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பிக் கல்யாணம் செய்தனாங்கள்.கல்யாணம் செய்தனாங்கள் என்று சொல்வதைவிட உன்னுடைய அப்பா, என்னைத் தூக்கிக் கொண்டு வந்து குடும்பம் நடத்தியவர் „ என்று சொல்ல சிவகாமி திகைத்துப் போய்’ ஏனம்மா அப்பா உங்களைத் தூக்கிக் கொண்டு போனவர் என்று கேட்க „அவருக்கு அவ்வளவு அவசரம் அதுக்கு நான் என்ன செய்ய’ என்ற தாயிடம் ,’இவ்வளவு நாளும் இதையேன் எங்களுக்குச் சொல்லவில்லை,’ சொல்ல வேண்டிய தருணத்தை காலந்தான் தீர்மானிக்கும், உன்ரை தலையிலை இருக்கிற பூவுக்கும் அர்த்தமிருக்கு.முதல்முறை சாகித்தியன் இஞ்சை வந்த போத அந்தப் பிள்ளை உன்னை பார்த்த பார்வையை நான் மட்டுமல்ல அப்பாவும் கவனித்தவர். ஒரு வயதுக்கு வந்த பொம்பிளைப் பிள்ளையை ஒரு இளைஞன் பார்க்கும் பார்வையிலேயே கண்டு கொள்ளலாம், அவளை அவன் சும்மா பார்க்கிறானா அல்லது விரும்பிப் பார்க்கிறானா என்று.

ஒரு பொம்பிளைப் பிள்ளையை முதல் பார்வையிலேயே அவன,; இவள் எனக்கு மனைவியாக வந்தால் நல்லது என்று நினைப்பான்,அது மாதிரித்தான் பொம்பிளைப் பிள்ளையளும் முதல் பார்iவியிலேயே இவன் எனக்குப் புருசனாக வந்தால் நல்லாயிருக்கும் என்று கற்பனை செய்வாள்.பார்வைதான் காதல் வாகனம்,அதுதான் கல்யாணம் வரை கொண்டு செல்லும்.

உன்ரை தலையில் இருக்கும் பூவுடன் சாகித்தியன் உன்னை விரும்புகிறான் என்ற ஆசையையும் சேர்த்துத்தான் உன் தலையில் நீ வைச்சிருக்கிறாய். சிலரின் முகங்கள் காதலைக் காட்டாது.சாகித்தியன், குரு, கொண்ணை முகங்களைப் பார் காதலுக்கும் தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்பது போன்ற முகங்கள்.சாகித்தியன் தாயாருக்காக பூவைக்

கொண்டு வரவில்லை.அப்படிக் கொண்டு வந்திருந்தாள் காருக்குள்ளேயே வைத்துவிட்டு வந்திருபபான்.அடுப்படி வாசல் மேசையில் வைத்ததே உன் தலைக்கு அது வரவேண்டுமென்பதற்கே.

சிலரிடம் காதலை வெளிப்படுத்தும் முகமொழியைக் காண முடியாது.ஆனால் காதல் கடலாக அவர்கள் மனதில் இருக்கிறது.சாந்தினி எதேச்சையாகவா கொண்ணைக்குப் பக்கத்தில் போயிருந்தவள் என்று நினைக்கிறாய்.அவள் விரும்பித்தான் போயிருந்தவள்.கொண்ணையும் சாந்தினியும் தனியாகச் சந்திப்பதும் படம் பார்ப்பதும் பல மாதங்களாக நடைபெறுவது எனக்குத் தெரியும்.’ எப்படி அம்மா இதெல்லாம் தெரியும்’ என்:று கேட்ட சிவகாமி, ஆச்சரியத்துடன் தாயார் சொல்வதைக் கேட்டவளுக்கு,’ அவர்களைப் பார்த்தவர்கள் சொல்வார்கள்தானே’ என்ற தாயிடம், „ஏனம்மா அண்ணையைக்; கேட்கேலை „என்றதும்,’கேட்கக்கூடாது கேட்கும் உரிமை எனக்கோ அப்பாவுக்கே இல்லை,ஏனென்றால் நானும் அப்பாவும் விரும்பிக் கல்யாணம் செய்தவர்கள்,அதைவிட அதிரடிக் கல்யாணம் செய்தவர்கள். சாந்தினிதான் எனது மருமகள் என்று நானும் அப்பாவும் எப்பவோ தீர்மானித்து விட்டோம்….அதைவிட அவள்…என்று சொல்ல வாயெடுத்த மகேஸ்வரி நிறுத்திவிட்டு அது சரி நீயேன் கனகாம்பரத்தில் சரம் கட்டி சாந்தினிக்கு தலையில் வைத்தனி என்ற உன்னுடைய உள்மனதை எனக்குத் தெரியும்.அவள் உனக்கு அண்ணியாக வரவேண்டும் என்ற ஆசைதான் அதற்குக் காரணம். அழகான ஒரு பெண் கொண்ணைக்கு வர வேண்டுமென்று ஆசைப்படுகிறாய், இன்னொன்றையும் சொல்கிறன் கேள் நான் அட்வான்ஸ் லெவல் சோதனையில் லொஜிக், எதிக்ஸ், சமூக விஞ்றூனத்தில் டிஸ்ரிங்சன் எடுத்தவள்.மற்றவர்கள் மனதில் என்ன இருக்கு என்று என்னாள் சொல்ல முடியும்.எனக்கு விருப்பமான பாடங்களில் இவையும் ஒன்று சொல்லி முடிக்க,இவ்வளவு காலமும் அளவாகப் பேசிய தாயா ஒரு விரிவுரையாளர் மாதிரி இப்படிப் பேசுகிறாள் என வியந்த அவள் தாயை நினைத்து உணர்ச்சி வசப்பட கண்கள் கலங்கத் தொடங்கியது.

விறாந்தையிலிருந்த நால்வரும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எதை எதையோ கதைத்த போதும், தாயும் மகளும் கதைத்ததையும் சாந்தினி கேட்டுக் கொண்டிருந்ததால்,ஏதோ ஒரு பெரும் முடிச்சு இருப்பதை உணரத் தொடங்கினாள்.

„ போய் எல்லாரையும் வரச் சொல்லு சாப்பிட’என்று சிவகாமியிடம் சொல்ல,அவள் விறாந்தைக்குப் போய் வாருங்கோ சாப்பிட எனக் கூப்பிட்டவளின் கண்களைப் பார்த்த சந்திரன், „ ஏன் உன்ரை கண் கலங்கியிருக்கு என்று „ ஒன்றுமில்லை சம்பல் கை கண்ணிலை பட்டிட்டுது அதுதான் என்று இழுக்கிறாள்.

தகப்பனும் வாழையிலைகளுடன் படியேறுகிறார்கள்.மத்தியானச் சாப்பாடு சாப்பிடும் போது ஒருவருக்குப் பக்கத்தில் ஒருவர் எப்படி இருந்தார்களோ அப்படியே மேசைக்கு முன்னால் இருந்தார்கள்.மத்தியானம் சமைத்த ஆட்டுக்கறி,கத்தரிக்காய்க் கறி,சுறாவறை, விளமீன் சுட்ட கருவாடு போட்ட சம்பல்,முட்டைப் பொரியல் என மேசையில் கிடந்தன.

சாப்பிட உட்கார்ந்ததும் குரு மகேஸ்வரியைப் பார்த்து „மாமி நாங்கள் போகேக்கிலை இங்கை இருக்கிற கறியளோடை அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புட்டும் முக்கியமாக சுறாவறையும் தந்துவிடுங்கோ, அப்பாவுக்கு சுறாவறை பிடிக்கும் அதுதான் என்று குரு சொல்ல,அதுக்கு யோசிக்க வேணடாம் வீட்டை கொண்டு போறதுக்கெண்டு எல்லாம் கட்டி வைச்சிட்டன்,முதலிலை சாப்பிடுங்கள் என மகேஸ்வரி சொல்ல எல்லாரும் வாழையிலையில் சாப்பிடத் தொடங்கிறார்கள்.

புட்டுத் தனியாகவும்,கறிகள் தனியாகவும் கட்டிய பார்சல்களை ஒரு பையிலும், காலையில் தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புடலங்காய்,வாழைப் பொத்தி,வீட்லிருந்து வெங்பகாயப் பிடிகள், மிளகாய்கள்,வாழையிலை என இன்னொரு பையிலுமாக சாகித்தியனும்,குருவும் அவற்றைத் தூக்கிக் கொண்டு கேற்றடியில் தெருவோரத்தில் நிற்கும் தங்களுடைய காரை நோக்கிப் போய்க் கொண்டிருக்க அவர்களுடன் சச்சிதானந்தம்,மகேஸ்வரி,சிவகாமி, போய்கொண்டிருக்க அவர்களுக்குப் பின்னால் உரசாத குறையாக சந்திரனும் சாந்தினியும் வந்து கொண்டிருந்தனர்.

சச்சிதானந்தத்திற்கு மச்சான் முறைதான் பக்கத்து வீட்டுச் சிவகுரு.சிவகுருவின் மனைவிதான் வசந்தமாலா.அவர்களின் மகள்தான் அர்ச்சனா.சிவகுருவுக்கு சிமென்ற் பக்ரறியில் வேலை.சீமெந்தின் பலபடி அரைக்கும் நிலைகளைத் தாண்டி இறுதியாக பையில் அடைப்பதற்கு முன் அதனுடைய தரத்தைக் கண்டறிவதற்காக சீமெந்து நிரம்பியிருககும் சைலோஸ் என்ற பெரிய தாங்கியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சீமெந்தை எடுத்துக் கொண்டு போய் பரிசோதனைக் கூடத்தில் கொடுப்பதுதான் சிவகுருவின் வேலை. அவருக்கு இரவு பகலென்று வேலை கிழமைக்கொருக்கா மாறி மாறி வரும்.

சீமெந்தின் தரம் சிரியானது என்றால்தான் சீமெந்தை பையிலடைக்கும் வேலை நடக்கும்.இன்றைக்கு சிவகுருவுக்கு பகல் வேலையாதலால், இரவு சாப்பாடு முடிந்ததும் சச்சிதானந்தம் வீட்டிலிருந்து கதைப்பதற்காக வந்து கொண்டிருந்த சிவகுரு, வசந்தமாலா அர்ச்சனா மூவரும் புறப்படவிருந்த குரு,சாகித்தியன்,சாந்தினியைக் கண்டவர்கள்’ என்ன வெளிக்கிட்டியள் போல’ என்று கேட்க,’ஓம் காலையிலை வந்தனாங்கள்,சாப்பாடு சாப்பாடாய்ச் சாப்பிட்டு நேரம் பிந்திப் போட்டுது ,வாறம் என்று எல்லாருக்கும் சொல்லிவிட்டு கையைக் காட்டியபடி ஏற காறைச்சுற்றிவந்த அர்ச்சனாவின் கையில் குரு சுரண்டியதை காருக்குள் இருந்தபடியே சாந்தினி பார்த்து விடுகிறாள்.

வீராதி வீரனும் காதல் வசப்பட்டால் கீரைத்தண்டாகிவிடுவினம் என்பதற்கு குரு சாட்சியாகும்.

சிவகுரு குடும்பமும் சச்சிதானந்தம் குடும்பமும் கதைத்தபடி சச்சதானந்தம் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

குரு காரை ஓட்டிக் கொண்டிருக்க பக்கத்தில் சாகித்தியன் இருக்கிறான். பின் இருக்கையில் கால்களை நீட்டி சாய்ந்தபடி இருந்த தங்கசசியாரிடம் „ காலை நொண்டி நொண்டி நடக்கிறாய் என்ன நடந்தது என்று சாகித்தியன் கேட்க முள்ளுக்குத்திப் போட்டுது, முளளுக்குத்தும் அளவுக்கு எங்கை போனனி, வயல்வெளிக்குப் போக வெள்ளவாய்க்காலுக்குள்ளை இறங்கி நடக்கேக்கிலை முள்ளுக்குத்திப் போட்டுது.தம்பியாரும் தங்கச்சியாரும் மாறி மாறி கதைச்சதைப் பார்த்த குரு,முள்ளை எடுத்தாச்சோ கேட்டவன், யார் எடுத்தது சிவகாமியோ ,இல்லை – அப்ப மாமியோ – இல்லை , அப்ப மாமாவோ -இல்லை அப்ப….தமையனும் தங்கச்சியாரும் மாறி மாறிக் கதைத்தைக் கண்ட சாகித்தியன், விடண்ணை ஆர் முள்ளெடுத்துவிட்டது என்று தெரியுந்தானே..பிறகு ..போய் இவள் என்ன உண்மை சொல்லப் போறாளே….ஆர் முள்ளெடுத்து விட்டிருப்பார் என்று தெரியுந்தானே என்றவுடன் சாந்தினி, கலோ அண்ணாக்களே முதலிலை கையிலை சுரண்டிறதை விட்டு பேசாமல் இருங்கள்.பெரியவரே நேர பார்த்து காரை ஓட்டுங்கோ,கார் திரும்பிப் போய் அர்ச்சனா வீட்டடியில நிக்கப் போகுது „ என்று சாந்தினி சொல்ல „இவள் என்ன கையிலை சுரண்டிறது என்கிறாள்’ என்று தமையனைப் பார்த்துக் கேட்க „அவளுக்கு விசர் அவள் சும்மா அலம்புவாள்’ என்ற குரு தான் அர்ச்சனாவின் கையை சுரண்டியதைக் கண்டதால்தான் சொல்கிறாள் என அவன் நினைத்து மௌனமாகிறான்.

தமையன்மாரை சீண்ட வேண்டுமென்பதற்காக அண்ணாப் பிரபுக்களே நீங்கள் ஆயிரம் அடி பாய்ஞ்சால் உங்கடை தங்கச்சி பத்தாயிரம் அடி பாய்வாள் தெரியுமோ என்கிறாள்.

காரிலிருந்து இறங்கிய மூவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது போல சந்திரசேகரும் செல்லம்மாவும் விறாந்தைக்கு வருகிறார்கள்.போகும் போது தன்ரை தாவணி பாவாடை சட்டை போட்டுக் கொண்டு போனவள் இப்ப வேறை தாவணி சட்டை பாவடையுடன வருகிறாளே என்று நினைத்த செல்லம்மா சிவகாமியினுடையது என ஊகித்துக் கொள்கிறாள்.

கனகாம்பரபு;பூச் சரத்தை தலையில் iவைத்து அதை முன்னுக்கு விட்டபடி வந்த மகளைக் கண்டதும் தகப்பன் ஆச்சரியப்படுகிறார்.

தாங்கள் கொண்டு வந்த பொருட்களை தாயிடம் கொடுத்த குரு, சாப்பாடு கொண்டு வந்த பையை தன்னுடனேயே அடுப்படிக்குள் கொண்டு போய்க் கொண்டே தம்பி, தங்கச்சி இரண்டு பேரும் இஞ்சை வாங்கோ, தம்பி புட்டு கறியளைச் கொஞ்சம் எலக்றிக் அடுப்பிலை சூடுகாட்டு, தங்கச்சி வாழையிலையிலை இரண்டெடுத்து மேசையிலை போடு, அம்மா அப்பா நீங்கள் இரண்டு பேரும் சாப்பிட வாங்கோ நாங்கள் அங்கை சாப்பிட்டிட்டு வந்திட்டம், நீங்கள் சாப்பிடுங்கள்,அம்மா இவ்வளவு நாளும் நீங்கள் சாப்பாடு போட்டுத் தந்தனீங்கள்,இன்றைக்கு நாங்கள் அதைச் செய்கிறம் என்று சொல்ல தவிர்க்க முடியாத நிலையில் தாயும் தகப்பனும் மேசைக்கு முன்னால் உட்கார பிள்ளைகள் மூன்று பேரும் புட்டையும் கறிகளையும் அவர்களுக்குப் போட தஙக்கச்சி அப்பாவுக்கு சுறாவறை பிடிக்கும் கூடப் போடு என்று சொல்ல மௌனமாக புட்டுடன் சுறாவறையை எடுத்து கலந்து வாயில் வைத்தவர்

கண்ணீர் வழிய குலுங்கி குலுங்கி அழ திகைத்துப் போய் மூன்று பிள்ளைகளும் பார்க்க’இருபத்தைந்து வருசமா உறவைக் கண்ணீரோடு பூட்டி வைச்சது பேதும் பிள்ளையளுக்குச் சொல்லுங்கள்’என்றவுடன்’ யாரப்பா அவை’ என்று சாந்தினி கண்ணீருடன் கேட்க,’இந்தச் சுறாவறைக்குச் சொந்தக்காரி என்னுடைய ஒரே தங்கச்சி, அவள் என்னுடைய இரத்தம்,நீங்கள் உங்களுடைய சொந்த மாமி மாமா வீட்டுக்குத்தான் போய் வந்திருக்கிறியள் என்று நா தழுதழுத்து சந்திரசேகரம் சொல்ல, என்ன நடந்ததப்பா எங்களுக்கும் அவைக்கும் என்னதான் நடந்தது எனு;ற சாகித்தியன் கேட்க கண்ணீரைத் துடைத்தபடியே நான் சொல்கிறன்’ என்று மகேஸ்வரி சொல்லத் தொடங்க பிள்ளைகள் மூவரும் கண்ணீரோடு கதை கேட்கத் தொடங்குகின்றனர்.

 

(தொடரும்)

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *