கவிதைகள்

அன்பகலா வாழ் வமைந்தால் வளர்வு!….. ( கவிதை )….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

காதல் வந்தால் எழுந்துவிடும் சிலிர்ப்பு 

கல்யாணம் நிகழ்ந்து விட்டால் சிறப்பு

சோதனைகள் மிகுந்து விட்டால் தவிப்பு

சுமைகளது  குறைந்து விட்டால் விடுப்பு 

 

சாதனைகள்  குவிந்து விட்டால் மதிப்பு

சறுக்கியே  வீழ்ந்து விட்டால் இழப்பு

வேதனைகள் சேர்ந்து விட்டால் வெறுப்பு

வில்லங்கம் அகன்று விட்டால் வெளிப்பு 

 

கோபமது  மிகுந்து விட்டால் கொதிப்பு 

குணநிறைவு எழுந்து விட்டால் தணிப்பு  

பாவமது  மிகுந்து விட்டால்  இருட்டு

பக்குவமே  நிறைந்து விட்டால்  புலர்வு  

 

அன்பகலா வாழ் வமைந்தால்  வளர்வு                 

அறநினையா வாழ் வமைந்தால் தளர்வு

 
துன்பமிலா வாழ் மமைந்தால் நிறைவு
 
துணிவறியா மன மமைந்தால் குறைவு 
 
 

கொடுத்தாலே  கை நிதமும்  உயரும்

தடுத்தாலே  கை நிதமும் தாழும் 

எடுத்தாலே  பழி  வாழ்வில் தொடரும்

விடுத்தாலே  வினை  வாழ்வில்  அகலும் 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *