கவிதைகள்

கலைமகளே கைதொழுது கழல்பணிந்து நிற்கின்றோம்!… ( கவிதை )….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கும் மாதேவி

உள்ளக் கனவுகளை உன்னிடத்தில் புகல்கின்றோம் 

கள்ள மனமுடையார் காசாக்கும்  கருத்துடனே 

கல்வியைக் கையாளும் கயமைதனைக் களைந்திடம்மா 

கண்ணான் கல்வியினைக் கற்றுவிட்ட பலரிப்போ 

கண்ணியத்தை பறக்கவிட்டு கெளரவாமாய் உலவுகிறார்

கல்வியது கண்ணியத்தை காப்பாற்றி நிற்பதற்கு

கற்றுவிட்டார் மனந்திருந்த காட்டிவிடு கருணையினை 

கல்வியற்றார் எனுச்சொல்லை காணாமல் ஆக்கிடுவாய் 

கசடுநிறை கல்விதனை களைந்துமே நின்றிடுவாய்

கல்விகற்றார் மனமெல்லாம் கருணையை இருத்திடுவாய் 

கலைமகளே கைதொழுது கழல்பணிந்து நிற்கின்றோம் 

நல்லாசான்  வாய்த்துவிட  நாமகளே அருள்புரிவாய்

நல்வார்த்தை நாவில்வர நாளுமே துணைபுரிவாய் 

நல்லுறவு நல்வழிகள் வாய்த்துவிட அருள்புரிவாய்

நாமகளே உன்பாதம் நாம்பணிந்தே நிற்கின்றோம் 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *