குளிர்காய்வோம் வா நண்பா! …. ( கவிதை }….. சங்கர சுப்பிரமணியன்.

விஜய் சேதுபதியும் நடித்தாலென்ன
நடிக்காமல் போனால் எமக்கென்ன
எந்நாட்டு பிரச்சனை போய்விடுமா
சொல்லு நண்பா சும்மா இருநண்பா
முத்தையா முரளீதரன் படமெடுத்தாலும்
அட எடுக்காமல்தான் விட்டாலென்ன
மருத்துவம்படிக்க இடம்கிடைத்திடுமா
எம்மாணவர்க்கு அதனால் நன்மையென்ன
இலங்கையர் படம் எடுத்தாலென்ன
அதில் இந்தியர்தான் நடித்தாலென்ன
கூடங்குளம் பிரச்சனை ஓய்ந்திடுமா
கூக்குரலிட்டாலும் அது தீர்ந்திடுமா
எடுப்பவனுக்கு ஒருபலன் என்றால்
நடிப்பவனுக்கு இன்னொருபலனாம்
கஞ்சிக்கு வழியின்றி கலங்கு நிற்கும்
மக்களுக்கென்ன பயன் மறந்தாயோ
ஊர் எப்படி கெட்டாலும் உறவெல்லால்
கெட்டழிந்ததே அங்கு நின்றாலும் நாம்
சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு
கொம்புசீவி விட்டு குளிர்காய வா நண்பா!
-விஜய் சேதுபதியும் நடித்தாலென்ன
நடிக்காமல் போனால் எமக்கென்ன
எந்நாட்டு பிரச்சனை போய்விடுமா
சொல்லு நண்பா சும்மா இருநண்பா
முத்தையா முரளீதரன் படமெடுத்தாலும்
அட எடுக்காமல்தான் விட்டாலென்ன
மருத்துவம்படிக்க இடம்கிடைத்திடுமா
எம்மாணவர்க்கு அதனால் நன்மையென்ன
இலங்கையர் படம் எடுத்தாலென்ன
அதில் இந்தியர்தான் நடித்தாலென்ன
கூடங்குளம் பிரச்சனை ஓய்ந்திடுமா
கூக்குரலிட்டாலும் அது தீர்ந்திடுமா
எடுப்பவனுக்கு ஒருபலன் என்றால் ![]()
நடிப்பவனுக்கு இன்னொருபலனாம்
கஞ்சிக்கு வழியின்றி கலங்கு நிற்கும்
மக்களுக்கென்ன பயன் மறந்தாயோ
ஊர் எப்படி கெட்டாலும் உறவெல்லால்
கெட்டழிந்ததே அங்கு நின்றாலும் நாம்
சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு
கொம்புசீவி விட்டு குளிர்காய வா நண்பா!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()