கதைகள்

சரிவராது!… ( குறும் கதை) …. கே.எஸ்.சுதாகர்.

சரிவராது!….

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

சின்னத்துரை தனது பொறியியலாளர் மகனுக்கு இணுவிலில் பெண் பார்க்கச் சென்றார்.

பெண் வகுப்பு பன்னிரண்டு சித்தியடையவில்லை. தகப்பன் கோடீஸ்வரன். பெரிய பிஷ்னஸ் முதலாளி.

“நேற்றடிச்ச சூறாவளியிலை வாழையள் முறிஞ்சு போய்க் கிடக்கு. இரண்டு குலையள் வெட்டி வைத்துவிட்டு… ” உரையாடல் நடுவில் எழுந்து கொண்டார் பெண்ணின் தந்தை. தோட்டத்தில் வேலை முடித்து திரும்பி வந்தபோது, சின்னத்துரை அங்கிருக்கவில்லை.

நடத்தை, கல்வி அதன் பின்னரே பணம் அவருக்கு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *