கவிதைகள்
பண்டிதரானாலென்ன!…. ( கவிதை )….. சங்கர சுப்பிரமணியன்.

நன்று செய்தால் நாம் நன்றென்போம்
தீமை செய்தாலதையும் தீதென்போம்
நன்று செய்தால் அதுவே புண்ணியமாம்
தீமை செய்தால் அதுவே பாவமாகுமாம்
புண்ணியத்துக்கு சொர்க்கமென்பார்
பாவத்துக்கு நரகமென்றாரே அவரும்
சொர்க்கம் வான் மேல் என்பாருமிங்கே
நரகம் பூமியினடியில் என்று சொல்வார்
நம்பினேன் நன்றியென்று பதில் இருத்தி
ஒரு கேள்வி எழுப்பி பதிலும் கேட்டேன்
எல்லா மதத்தோரும் சொர்க்கத்திலங்கே
சேர்ந்தே இருப்பாரோ என்று கேட்டேன்
சேர்ந்திருப்பின் இங்கேயே இணைந்து
இன்புற்று இருத்தலை ஏன் தவிர்த்தாரோ
அங்கும் விலகித்தான் இருப்பர் என்றால்
அதெப்படி சொர்க்கமாகுமென்றேன் நான்
பதில் சொல்லாமலே பரிதாபமாக நின்றார்
பலபடிப்பு படித்து பண்டிதராய் இருந்தவரும்
பாமரன் கேள்விக்கு பதில் தெரியாதெனில்
படித்துபலனென்ன பண்டிதரானாலென்ன!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()