கதைகள்
அமைதி!…. ( குட்டிக்கதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

கொரோனா தன் ஆட்டத்தை வெறித்தனமாக ஆடிவருவதாலேயே இத்துன்பம். அது தன் ஆட்டத்தை நிறுத்திவிட்டால் துன்பம் யாவும் ஓடிவிடும் என்றான் கண்ணன்.
“அப்படியானால் கொரேனா கடவுளைவிட பெரிதா?” என்றான் கோபால்.
“தெரியலையே. அவருதான் நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாம் என்றார். இப்போது அவரே அமைதியாகிவிட்டாரே.”
“அவருக்கே இந்த நிலைன்னா என்னத்த சொல்ல?” நாமெல்லாம் எந்த மூலைக்கு?
என்று கோபாலும் அமைதியானான்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()