கவிதைகள்
அகமிருத்தி போற்றி நிற்போம்!….. ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

அப்பா எனும் வார்த்தை
அன்புக்கே அர்த்த மன்றோ
அப்பா எனும் வார்த்தை
அணைப்புக்கும் அர்த்த மன்றோ
அப்பா எனும் வார்த்தை
அறிவுக்கும் அர்த்த மன்றோ
அப்பா எனும் வார்த்தை
அத்திவாரம் ஆகு மன்றோ
அப்பாவின் அரு கிருந்தால்
ஆனந்தம் பெருக் கெடுக்கும்
அப்பாவின் கை பட்டால்
அளவில்லா இன்பம் வரும்
அப்பாவின் கால் தொட்டால்
ஆசியெலாம் எமக்கு வரும்
அப்பாவை தினம் வணங்கி
அகம் நிறைத்து நிற்போமே
அவையிருக்க வேண்டு மென்று
அனுதினம் அவர் நினைப்பார்
அறிவுடையார் சேரு என்று
அவருரைப்பார் அனு தினமும்
அறிஞனென பல விருது
குவிகிறதே அள வின்றி
அதை விரும்பும் அப்பாவோ
அருகிருக்கா சென்று விட்டார்
அப்பா என வழைத்தால்
அது வெமக்கு மந்திரமே
அப்பா வென நினைத்தால்
அது வெமக்கு நற்றுணையே
அப்பாவின் உணர் வெம்மை
அறவழியில் செலுத் திடுமே
அப்பாவை அனு தினமும்
அகமிருத்தி போற்றி நிற்போம்

![]()