கதைகள்
காலக் கொடுமை!…. ( குறும் கதை ) … சங்கர சுப்பிரமணியன்.

ஒரு கோவிலில் பூசாரிகள் கோவிலுக்குள் செல்லாமல் நின்றுபோது ஒருவர் அங்கே நின்ற மற்றவரிடம் என்ன நடக்கிறது என்ற கேட்க,
“எல்லாம் காலக் கொடுமைங்க” என்றார் மற்றவர்.
“அப்படி என்னதாங்க கொடுமை?”
“பூசாரிதான் நம்மைப் பார்த்து அம்பாள் பார்த்துப்பா, பகவான் பார்த்துப்பார் என்பார். இன்று அவரையே ஒருவன் கொரோனா இருக்கான்னு பார்த்து கோவிலுக்குள் அனுப்புறான்னா என்னவாம்”
காலக் கொடுமைதானுங்க என்று
தலையாட்டினார் அந்த ஒருவர்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()