கதைகள்

கிரகப்போர்!…. ( நாவல் )…. காசியரின் பேரன்.

பூமியிலிருந்து வேற்றுக்கிரகங்களைப் பார்ப்பதற்கு அதிகளவு சக்தி வாய்ந்த கண்ணாடியை உபயோகிப்பார்கள்.அதை நிறுத்தி வைப்பதற்கென்று பெரிய தளத்தைக் கடஇடுவார்கள்.ஆனால் வைரிக் கிரகத்தில் சாமியும் சுந்தரியும் அணிந்த கண்ணாடியின் சக்தி அளவிட முடியாதது.

வைரிக்கிரகம் விஞ்ஞானத்தில் அதி உச்சத்திலிருந்த கிரகமாகும்.அங்கு வாழும் மனிதர்கள் அனைவருமே விஞ்ஞான அறிவு உடையவர்கள்.

அங்கு தயாரிக்கப்படும் விஞ்ஞானப் பொருட்கள்,பூமியைவிட பலவாயிரம் மடங்கு நவீனமானது.

சாமியும் சுந்தரியும் அணிந்த கண்ணாடிகள் அவர்களிருந்த மண்டபத்தின் சுவர்களையும் ஊடுருவித் தாண்டி பல இலட்சம் கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கும்; கிரகங்களுடன் பூமியையும் அண்மையில் காட்டிக் கொண்டிருந்தது. அந்தக் கண்ணாடியின் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் அங்கிருந்தவர்களின் உடலை ஊடறுத்துச் சென்றாலும் அவர்களின் உடல் பாகங்களைக் காட்டாது.

நீங்கள் பூமியை இன்னும் அருகில் பார்க்க வேண்டுமென்றால் விரலால் மெதுவாக உங்களுடைய கண்ணருகில் இருக்கும் தட்டையான பகுதியை மேல்நோக்கி அழுத்துங்கள் என்று அங்கிருந்த அதிகாரி போன்றவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

பூமி அருகாமையில் தெரிய,அவர்களுடைய நாடும் தெரிந்தது.உங்களுடைய நகரத்தை முதலில் மெதுவாக விரல்களால் எழுதுங்கள் பிறகு நீங்கள் இருந்த வீதியையும் உங்கள் வீட்டு இலக்கத்தையும் நீங்கள் விரல்களால் அழுத்திய இடத்தில் விரல்களால் எழுதுங்கள் என்று அவர் சொல்ல, அவர்களுக்கு வியப்புக்கு மேல் வியப்பு அவர்களின் வீடு தெரிந்தது.வீட்டின் நாற்பக்கங்களிலம் புற்களும் பூடுகளும் வளர்ந்திருந்தன.

வீட்டின் முற்றத்தில் இதுவரை பார்த்திராத இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் நின்றிருந்தார்கள்.

பூமியின் கணக்குப்படி சாமியும் சுந்தரியும் வேற்றுக் கிரகங்களுக்கு வந்து பல ஆண்டுகளாகிவிட்டன.ஆனால் அவர்கள் வேற்றுக் கிரகங்களுக்கு வந்து, வேற்றுக்கிரக கணக்கின்படி சில நாட்களே ஆகியிருந்தன.

பல ஆண்டுகளாக சாமியும் சுந்தரியும் பூமியில் உள்ள அவர்களின் வீட்டில் இல்லாததால்,அவர்கள் இனி வரமாட்டார்கள் என்ற என்று முடிவெடுத்து யாரோ அந்த வீட்டுக்கு குடிவந்துவிட்டார்கள்.

சாமியும் சந்தரியும் எதிர்வீட்டில் இருப்பவர்களைப் பார்க்க முடியுமா என்று மனதில்

நினைக்க எதிர்வீட்டில் நிற்பவர்கள் தெரியத் தொடங்கினார்கள்.

அவர்கள் அணிந்திருந்த கண்ணாடி போன்ற சாதனம் அவர்களின் மூளையோடும் கண்ணோடும் தொடர்புபட்டிருந்தது.அறிவு நினைப்பதையும் கண்ணின் செயல்பாட்டினாலும் அக்கருவி இயங்கும் தன்மை பெற்றிருந்தது.

பூமியின் விஞ்ஞான அறிவுக்கு எட்டியவரை, சாமியும் சுந்தரியும் இதுவரையில் சென்றுவந்த கிரகங்கள் எல்லாமே, பூமியிலுள்ள விஞ்ஞானிகளால் கண்டறியப்படாதவை.

இக்கிரகங்கள் பூமி மனிதர்களின் அறிவுக்கு பிரபஞ்ச இருட்டுக்குள் வேற்றுக்கிரகங்களாக இருப்பதாகவே அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் மிகவும் வெளிச்சமான பகுதியிலேயே வைரிக் கிரகமிருந்தது.

பிரபஞ்ச அண்டவெளியின் பரப்பளவை அறிய, மனிதமூளை எப்படித்தான் கற்பனை செய்தாலும்,மனிதன் தன் சிந்தனையை எவ்வளவுதான் தொடர் தொடராக நீட்டிக் கொண்டு போனாலும் அதனை எட்டித் தொடவே முடியாது.

மனிதர்களைவிட பலவாயிரம் மடங்கு விஞ்ஞான அறவின் உச்சத்தில் இருக்கும் உயிரினங்கள் வேற்றுக்கிரகங்களில் வாழ்கின்றன என்பது உண்மையே.

அண்டவெளியில் கிரகங்கள் தொகுதி தொகுதியாகவும் ஆங்காங்கே தனித்தனியாகவும் இரண்டு கிரகங்கள் மூன்றுகிரகங்கள் தனிக் கிரகஙகள் என்ற ரீதியில் எண்ணிறந்த கிரகங்கள் பரந்து கிடக்கின்றன.

தொகுதி தொகுதியான கிரகங்கள் ஈர்ப்பு விசையினால் தன்னைத்தாளே சுற்றிக் கொண்டும் மற்றைய கிரகங்களை சுற்றியும் வருகின்றன.

ஆனால் பிரபஞ்ச அண்டவெளியில் சில கிரகங்கள் தன்னைத்தானே சுற்றுவதும் இல்லை சுற்றிவருவதும் இல்லை. ஆடாமல் அசையாமல் நிற்கின்றன.அங்கும் உயிரினங்கள் உண்டு.

இன்னும் சில கிரகங்கள் உருண்டை வடிவிலேயே இல்லாமல் இருக்கின்றன.இவற்றை கிரகங்கள் என்று சொல்ல முடியாது.அவை தட்டையாகவும் ஒழுங்கற்ற வடிவிலும் இருக்கின்றன.அவற்றிலும்கூட உயிரினங்கள் இருக்கின்றன.

இத்தகு வியத்தகு பிரபஞ்ச அணடப் பெருவெளியல் வைரிக் கிரகத்தில் தாமிருக்கிறோம் என்பதை சாமியும் சந்தரியும் நம்பியும் நம்பாமலும் இருக:கின்றோம் என்பதை சாமிக்குப் பக்கத்திலிருந்த வைரிக் கிரகப் பெண் ‘இன்னும் உங்கள் இரண்டு பேருக்கும் பூமியைவிட்டு வந்து இன்னொரு கிரகத்திலிருக்கிறோம் என்பதை நம்பமுடியாமலிருக்கின்றது அல்லவா’ என்று கேட்டதும் உண்மைதான் என்பது போல தலையாட்டுகின்றனர் இருவரும்.

அன்றைய சந்திப்பு முடிய எல்லோரும் அந்தக் கூடத்தின் நடுவில் வந்து நின்றவுடன் மேலேயிருந்து படிகள் ஒவ்வொன்றாக இறங்கத் தொடங்கின.

அதில் ஒவ்வொருவராக ஏறி நிற்க படி மேலே சென்றது.மேல்தளத்தில் அவர்களை அழைத்துச் செல்ல நிரையாக வளைய விமானங்கள் காத்தக் கொண்டு நின்றன.

எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக வளைய விமானங்களில்; ஏறினார்கள்.சாமியிடமும் சுந்தரியிடமும் சிரித்த முகத்துடன் விடைபெறறுச் சென்று கொண்டிருந்தாரகள்;.

சாமியும் சுந்தரியும் ஏறிய விமானத்தில் இவர்களை வழிநடத்திய அதிகாரியும் ஏறினார்.உள்ளே மூவரும் அமர்ந்து கொண்டதும் ஒரு நறுமணம் வீசத் தொடங்கியது.அந்த நறுமணம் அவர்களின் சுவாசப் பைகளைச் சென்றடைந்ததும் அவர்கள் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சிக்கு உள்ளானார்கள்.

பூமியிலிருந்து வந்தவர்களை இன்னொரு கிரகத்தில் வாழ வைப்பதற்கும் எவ்வித பாகுபாட்டையும் அவர்கள் உணராதிருப்பதற்காகவும் அவர்கள் சென்றுவந்த கிரகங்களிலுள்ள விஞ்ஞானக் கருவிகளால் பல மாற்றங்களை அவர்களின் மூளைக் கலங்களுக்குள் செய்து வந்தார்கள்.

பூமிவாழ் மனிதர்களுக்கு அங்குள்ள நிலம், நீர்,காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவற்றிலுள்ள வேதியல் இயற்பியல் மூலக்கூறுகளின் அணுத்திரள்களால் அவர்களின் மூளைக் கலங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

அதே போல வேற்றுக் கிரகங்களில் வாழும் உயிரினங்களுக்கு அவற்றின் தோற்ற வடிவத்திலிருந்து,செயல்பாட்டுக்கும் அக்கிரகங்களிலுள்ள இயற்பியல் வேதியல் மூலக்கூறுகளே காரணமான போதிலும், அவர்களுடைய விஞ்ஞான அறிவினால் அதனை மாற்றியமைக்கவும் முடிந்தது.

பிரபஞ்ச அண்டவெளி முழுவதும் காந்தப்புலம் பரவியே நிற்கின்றது.இந்தப் பரவல் பூமியின் மேற்பரப்பில் மட்டுமல்லாது பூதமியிலுள்ள அனைத்துப் பொருட்களிலும் பூமியை ஊடறுத்தும் எங்கு பரவி நிற்கின்றது.

வேற்றுக்கிரக வாசிகள் இந்தக் காந்தப்புலத்தை பெரும் சக்தியாக மாற்றியதால்தான் மாங்கதிர்,அங்கனாக்கா, நண்டுங்காஈ பச்சைக்கிரகம், வைரிக் கிரகங்களில் விஞ்ஞானக் கருவிகள் யாவும் இந்தக் காந்தப்புலத்தினால் இயங்கிக் கொண்டிருந்தன.

பூமியில் இயங்கும் போக்குவரத்துச் சாதனங்கள் எரிபொருளினாலும் மின்சாரத்தினாலுமே இயங்குகின்றன.எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏறபட்டாலோ மின்சாரத்திற்கு தடை ஏற்பட்டாலோ போக்குவரத்துச் சாதனங்களின் சேவையில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

வேற்றுக் கிரகங்களின் காந்தப்புலத்தினால் போக்குவரத்துச் சாதனங்கள்

இயங்குவதால் இடையூறுகள் எதுவுமே ஏற்படுவதில்லை.

வளைய விமானம் சாமி சுந்தரி அதிகாரியையும் ஏற்றிக் கொண்டு மிதந்து சென்றுகொண்டிருக்கையில் ,சாமி சுந்தரியுடன் ஊட்கார்ந்திருந்த அதிகாரி’ உங்களிருவரையும் வைரிக் கிரகத்திலுள்ள மிக முக்கியமான விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு கூட்டிக் கொண்டு போகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அந்த விமானம் ஒரு இடத்தில் அப்படியே நின்றது.

கொஞ்சத் தூரத்திற்கு அப்பால் இந்த வாகனத்தை நோக்கி மிதந்து வந்து கொண்டிருந்த இன்னொரு விமானம் இவர்களின் விமானக் கதவுக்கு நேரே நிற்க குழாய் போன்ற நடைபாதை அவ்விமானத்திலிருந்து இவர்கள் போன விமானத்தின் கதவோடு வந்து ஒட்டியது போன்று நிற்க அங்கிருந்து இரு பெண்கள் இந்த விமானத்திற்குள் குழாய்நடைபாதை வழியாக வந்து ஏறினார்கள்.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *