போற்றலும் நடத்தலும!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

ஈன்றெடுக்கும் போது பெண் அன்னை
இணைந்து ஆடும்போது அவள் தங்கை
எடுத்தெனை கொஞ்சும்போது அக்கா
கிள்ளைமொழியில் கதைக்க காதலி
குடும்ப உறவில் இணைந்திட மனைவி
கணவனை இழந்தால் அவள் கைம்பெண்
மருத்துவ சேவையில் செவிலித்தாய்
நாட்டைக் காத்து போரிட வீரமறத்தி
பழமை கலைந்தால் அவள் புரட்சிப்பெண்
ஆதரவின்றி திரிந்தலைந்தால் அபலை
சமூக சீர்கேட்டால் விலையாக்கவும் அவள்
ஈசன் இடப்பக்கம் இருப்தாய் சொல்பவர்
அநுமனும் நெஞ்சில் கிழித்திட தெரிபவள்
ஆதிபராசக்தியை முதற் கடவுளென்பான்
பூமியை பெண்தெய்வம் என்றுபோற்றுவான்
நதியையும் மதியையும் பெண் என்பான்
சதிஎன்பான் பதி என்பான் சதிபதி என்பான்
சதியும் பதியும் பாதிபாதி என சதிசெய்வான்
ஆணும் பெண்ணும் பாதிப்பாதி என்பான்
ஆதிக்கம் செய்யவந்தால் விட மாட்டான்
சாதிப்பான் எல்லாவற்றிலும் சமமென்றே![]()
சமஉரிமை வேலைவாய்ப்பில் தரமாட்டான்
பெண்பெருமை பேசிபேசி காலம்கழிப்பான்
தன்பெருமை குலையுமென்றால் பெண்ணை அழிப்பான்!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()