கவிதைகள்

தேடுவதும் ஏன்?… ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

தடாகத் தாமரையில் வண்டாடும்
விடாது உன்முகத்தில் கண் ஆடும்
கொடத செல்வமதும் பாழாகிவிடும்
தொடாத இதயங்கள் பிரிந்துவிடும்

ஆடுகின்ற வண்டும் தாமரையிலமரும்
தேடுகின்ற கண் கண்ணில் உறையும்
ஓடுகின்ற நாட்கள் உறைய நின்றிடும்
கூடுகிற பொழுதுமட்டும் ஓடிப்போயிடும்

யார்வீட்டு வீட்டு கிளியோயென நினைத்தது
ஊர்விட்டு வந்த நிற்குமென் தோழிலமருது
பார்விட்டு போனாலும் பைங்கிளி தொடருமா
தேர்விட்டு இறங்கிடேனென சொல்லலாகுமா

அலையும் நெஞ்சில் சிலையென அமர்ந்தாய்
விலைகொடா உயிரை உன் வசமாக்கினாய்
தலைநிறைய மல்லிகையை சுமந்து நின்றாய்
உலையிலிட்ட இரும்பாய் உருகிட வைத்தாய்

கன்னமெனும் மேடையது கதையும் சொல்ல
இன்னும் வேண்டுமென சொல்லிட வைத்தே
மின்னுகின்ற கண்களினால் மோகமூட்டியே
என்னை உன்னுள் புதைத்து தேடுவதும் ஏன்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *