கவிதைகள்
பேதமை மறப்போமடி பாப்பா!…. ( கவிதை )…. சங்கர சுப்பிரமணியன்.

பாரதியைப்படி என் நண்பா!
நீயும் நமது பாரதியைப்படி
நற்பண்புகளை வளர்த்திட
அந்த பேதமற்றவனைப்படி
வெள்ளை நிறத்தொரு பூனை
சாம்பல் நிறத்திலுமொரு பூனை
என்றே சொல்லிச்சென்றவனை
ஏற்று நற்பண்பை நீ படி நண்பா!
பூனைக் குட்டிகளில் கூட அவன்
பேதம் காணா பெருங்குணமதை
நீயும் அறிந்திருந்தாய் என்றாலே
பிழையாய் ஏதும் செய்யமாட்டாய்
சேரனானாலும் சோழனானலும்
பாண்டியனே என்று சொன்னாலும்
நமக்கவர் மூவேந்தர்தாம் அன்றோ
அம்மூவேந்தரும் தமிழர்தாமன்றோ
இதில் உயரந்தவர் தாழ்ந்தவர் என்று
தமிழரை நேசித்திடும் நம் தமிழர்
எவருமே சொல்லித் திரியமாட்டார்
அவ்வாறே சொல்லித் திரிந்தாலும்
அவர்கள் பேதமை மறப்போம் பாப்பா!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()