கதைகள்
முதலும் வட்டியும்!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை
முதலும் வட்டியும்!
இராகவன் நகை அடைவு பிடிப்பவர், வட்டிக்கு காசு கொடுப்பவர்.
எல்லாவற்றையும் சுருட்டிக் கொண்டு திடீரென மாயமானார்.
திரும்பி வந்தவர் எல்லோருக்கும் கையை விரித்தார்.
பதம் பார்க்க பலரும் காத்திருந்தனர். ஒருநாள் பொலிஸ் ஸ்ரேசனுக்கு அருகில், சாக்கு மூட்டையைக் கவிழ்த்து மொத்தினார்கள்.
மயங்கிய நிலையில் கண்ட பொலிசார்,
“சத்தம் போட்டிருந்தா கலைச்சிருப்போமல்லே” என்றதற்கு இராகவன் வாயைத் திறந்து பே பே என உழறினார்.
வங்காளவிரிகுடாவிற்குள் ஆறு தங்கப்பற்கள் ஜொலித்தன.
![]()