கிரகப்போர்22 ( நாவல் )… காசியரின் பேரன்.

தாங்கள் பூமியைவிட்டு வந்து வேறொரு கிரகத்திலிருக்கிறோம் என்பதை சாமிக்கும் சுந்தரிக்கும் நம்ப முடியாமலிருந்தது.
இதுவரையில் பயணம் செய்து தங்கிய கிரகங்களின் சூழ்நிலை அங்குள்ள மனிதர்களுடன் இணைந்து சென்ற நாட்கள், அவர்களுக்கு கனவு போலத் தோன்றினாலும் தாங்கள் வேற்றுக் கிரகத்தில்தான் இருக்கிறோம் என்பதை அவர்களுடைய அறிவு உறுதியாகக் கூறிக் கொண்டிருந்தது.
மிகவும் சாதாரண மனிதர்களாக பூமியில் வாழ்ந்த இருவரும், வேற்றுக் கிரகத்துக்கு அழைத்து வரப்பட்டது என்பது அவர்களுக்குத் தொடர் ஆச்சரியத்தை கொடுத்த அதே வேளை, பூமியிலிருந்து வந்துவிட்டேமே என்ற நினைப்பினால் அவர்களின் மனதில் வேதனை ஏற்படக்கூடாது என்பதற்காக, வேதனைச் சமிக்ஞையை அனுப்பும் மூளைக் கலங்கள் மாங்கதிர் கிரகத்திலேயே செயலிழக்க வைக்கப்பட்டுவிட்டன.
இப்பொழுது அவர்கள் வைரிக் கிரகத்தில் ஒரு விருந்தினர் கூடத்திலிருக்கிறார்கள்.
அங்கிருந்த ஒருவர் கையிலிருந்த குமிழ் போன்ற ஒன்றை அமத்த ஒரு சுவர் போன்ற இடத்தில், துகள் துகளாக மின்னியல் அலை தோன்றி, துணி நெய்வது போல குறுக்கும் நெடுக்குமாக நூலிழைகள் போல் தோன்றி நீலத் திரையாக விரிந்தது.
எல்லோரும் ஆவலுடன் திரையைப் பார்த்தார்கள்.பூமியில் மாங்கதிர் கிரக வாசிகளின் நீள் சதுர விமானம், பூமி மனிதர்களால் வானவெளியில் மிதக்கவிட்ட சட்லைட்டுகளைச் சேதப்படுத்தும் மின்காந்த அலைகளை பாயச்சுவதிலிருந்து, வைரிக் கிரகத்தின் மண்டப விருந்து வரையும் காட்சியாக ஓடியது.
எல்லோரும் சாமியையும் சுந்தரியையும் ஒவ்வொரு முறையும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சாமிக்குப் பக்கத்திலிருந்த பெண்’நீங்களிருவரும் இனிச் சில காலம் இங்குதான் இருக்கப் போகிறீர்கள்.எங்களைப் போல அனைத்து விஞ்ஞான அறிவையும் கற்றுக் கொள்வீர்கள்.இந்தக் கிரகத்தில் வாழும் அனைவருக்கும் ஒரேவிதமான அறிவு இருக்கின்றது.பூமியில் இருப்பது போன்று ஏற்ற தாழ்வு இங்கு இல்லை என்று சொன்னதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார் சாமி.
தாங்களிருவரும் மெது மெதுவாக வேற்றுக்கிரக வாசியாக மாறிவருவதையும் சாமியும் சுந்தரியும் உணர்ந்தார்கள்.
அவர்களிருவரும் பூமியிலிருந்து வைரிக் கிரகத்திற்கு வந்து சேரும் வரை உள்ள அவர்களின் பயணம் திரையில் காட்டப்பட்டதன் பின்பு வளைய விமானங்கள் பற்றி அங்குள்ள ஒருவர் விபரித்துக் கொண்டிருந்தார்.
திரையில் வளைய விமானங்கள் போக்குவரத்துச் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவர் விபரிக்கையில், இந்த வளைய விமானங்கள் ஆகாயத்திலும், ஆகாயத்துக்கு அப்பாலுள்ள பிரபஞ்சத்திலும், தண்ணீரிலும்,தரையிலும் இயங்குவதற்கு காரணம் மினகாந்த அலைகளே என்றார்.
இந்த மின்காந்த அலைகள் தரையில் இந்த வளைய விமானம் இயங்கும் போது தரையின் மின்காந்த அலையினாலும், தண்ணீரில் இயங்கும் போது தண்ணீரிலிருந்து பெறப்படும் மின்காந்த அலையினாலும்,ஆகாயத்திலும் பிரபஞ்சத்தில் பறக்கும் போதும் ஆகாயத்தில் உள்ள மின்காந்த அலையினாலும் இயங்குகின்றது.
எல்லாக் கிரகங்களும் மின்காந்த அலைகளை உருவாக்கி அண்டவெளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன.அதைப் பயன்படுத்த நவீன அறிவு வேண்டும். இந்த அறிவு நீங்கள் போய் வந்த கிரகங்களில் உள்ள அனைவருக்கும் இருக்கின்றது.நீங்களும் அதனைப் பெறுவீர்கள்.
இப்பொழுது இந்தத் திரையில் அருகாமையிலும் தூரத்திலும் வளைய விமானங்கள் தெரிகின்றன.பூமியில் விமான சேவை போன்று இங்கு கிரகங்களுக்கிடையிலும் இவ்வளைய விமான சேவை
நடக்கின்றது.தூரத்திலே ஒரு சிவப்பு நிற வளைய விமானம் தெரிகிறதல்லவா,அது பூமியை நோட்டம் விட்டிட்டு வந்து கொண்டிருக்கிறது.
இக்கிரகத்திலுள்ள நேர அளவின்படி பார்த்தால் அரை மணியாலத்திற்குள் அவர்கள் பூமிக்குச் சென்று வந்துவிட்டார்கள்.
பூமியில் மின்காந்த அலைகளை சாதாரண மனிதர்களால் பார்க்க முடியாது.அங்கு விஞ்ஞானிகள் மட்டுமே அதைப் பார்க்கும் கருவிகளை வைத்திருக்கிறார்கள்.அதனால்தான் அங்கு அநியாயங்கள் நடக்கின்றன.பூமிக்கு மாங்கதிர் கிரகத்திலிருந்து மனிதர்களைக் கொண்டு போய்விட்டதற்கு காரணம் இயற்கையை மீறாமல் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காகவே.
ஆனால் அங்கு போனவர்கள் அதை மறந்துவிட்டார்கள்.நீதியற்ற மனிதர்களாக மாறிவிட்டார்கள். நீங்களிருவரும்கூட பூமிக் கணக்கின்படி பல கோடி ஆண்டுகளுக்கு முன் மாங்கதிர் கிரகத்திலிருந்து அனுப்பி வைக்கபட்டவர்களின் பரம்பரைiயினரே.
நாங்கள் கொண்டு போய்விட்ட அந்த மக்களை அழிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் எம்மை ஆளாக்கிவிட்டனர் என்று சொன்னவர், தொடர்ந்து இப்பொழுது மின்காந்த அலைகளை உங்களால் பார்க்கக்கூடிய சூழ்நிலை உருவாகப் போகின்றது என்றவுடன் வழமையாக இருந்த விளக்குகள் அணைய வெளிர்மஞ்சல் நிற விளக்குகள் எரிந்தன.
அப்பொழுது மின்காந்த அலைகள் அனைவரின் கண்களுக்கும் தெரிந்தன.வளைந்து வளைந்தும், நேராகவும் பின்னிப் பிணைந்தும் அவர்களை தழுவிக் கொண்டும், அவர்களின் ஒரு பக்கத்து உடலிலிருந்து ஊடறுத்து மற்றப்பக்கம் சென்று கொண்டிருந்தன.
முடிவில்லாத அலைகளாக அவை மிதந்து கொண்டிருந்தன.சாமிக்கு பக்கத்திலிருந்த பெண்ணை ஊடறுத்த மின்காந்த அலை சாமியின் உடலுக்குள்ளால் ஊடறுத்து சென்று மிதந்து கொண்டிருந்தது.
எல்லாத் திசைகளிலும் மின்காந்த அலை தெரிந்தன.வெளிர்மஞ்சள் விளக்க அணைய வழiமான விளக்கு எரியத் தொடங்கியது.மின்காந்த அலைகளை இப்பொழுது பார்க்க முடியவில்லை.
எல்லோரும் கண்களால் பார்க்குமளவிற்கு விஞ்ஞானத்தின் வளர்ச்சி இருப்பதைப் பார்த்து சாமியும் சுந்தரியும் வியந்தார்கள்.
மேலும் பல விஞ்ஞானத் தகவல்கள் அவர்களை வியப்படைய வைத்தன.இங்குள்ள எல்லா விஞ்ஞானக் கருவிகளும் முக்கியமாக வளைய விமான சாரதி இது போன்ற கருவியை கண்களில் அணிந்து கொள்வார்என ஒரு கருவியைச் சாமிக்கும் சுந்தரிக்கும் பேசிக் கொண்டிருநஇதவர் காட்டினார்.
சாரதி அணிந்து கொண்டு விமானத்தைச் செலுத்தும் போது மின்காந்த அலைகளின் சக்தி எவ்வளவு இருக்கின்றது என்பதை இக்கருவியூடாக பார்த்து விமானத்தைச் செலுத்துவார் போட்டுப் பாருங்கள் என்று சாமிக்கும் சுந்தரிக்கும் கொடுத்தார்.அவர்களிருவரும் கண்களில் அதை அணிந்தவுடன் முன்பு பார்த்தது போல மின்காந்த அலைகள் மட்டும் தெரியவில்லை.வேறு பலவும் தெரிந்தன.தெரிந்தவையைப் பார்த்து மலைத்துப் போய்விட்டார்கள்.
அப்படி எதைத்தான் அவர்கள் பார்த்தார்கள்
(தொடரும்)
![]()