கதைகள்

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!…. ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

(50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை)

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

இளைஞர்கள் புடைசூழ, 75 வயது மனோகரன் பார்ட்டியில் ஆடிக் கொண்டிருந்தார். சிறிது வெறி. தள்ளாட்டம்.

சமீபத்தில் அவுஸ்திரேலியா வந்திருந்த சொர்ணத்திடம், மனோகரனைக் காட்டி ரகசியம் சொன்னார் ஒரு பெண்.

மனோகரனும் சொர்ணமும் முன்னைய காதலர்கள்.

மனோகரனுக்கு ஐந்து பிள்ளைகள். மனைவி இறந்துவிட்டார்.

சொர்ணம் திருமணம் செய்யவில்லை. ஆடியவர்களை விலத்தியபடி உள்ளே போனார். மனோகரனின் கையைக் கோர்த்து ஆடினார். அவர் கன்னத்தில் இதழ் பதித்தார். பழைய கடனை முடித்துவிட்ட திருப்தியில் வெளியேறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *