கதைகள்
அதுவே மகிழ்ச்சி, அதுவே இன்பம்!…. ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

50 வார்த்தைகளுக்குள் ஒரு குட்டிக்கதை.
அதுவே மகிழ்ச்சி, அதுவே இன்பம்!….
சந்திரனும் மனைவியும் ஓய்வின்றி சதா வேலைக்குப் போவார்கள்.
ஒருமுறை சந்திரனின் பெற்றோர்கள் வெளிநாட்டுக்கு வந்தார்கள். அவர்களுக்கு
வீட்டுக்குள்ளேயே இருந்து போரடித்தது.
”சந்திரன்… எங்கையாவது வெளியிலை கூட்டிப் போப்பா.”
சந்திரன் அவர்களை ஷொப்பிங் கூட்டிச் சென்றான்.
”நீங்கள் கடைக்குப் போய்விட்டு வாருங்கள். நாங்கள் இந்த வாங்கிலை இருக்கிறம்” என்றார்கள் பெற்றோர்.
ஷொப்பிங் முடித்து திரும்புகையில் சந்திரனிற்கு அதிர்ச்சி.
பெற்றோர், இரண்டு முதியவர்களுடன் தமிழில் பேசி சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
நன்றி : வெற்றிமணி
![]()