கவிதைகள்

பாயும் புலியே….நில்!… ( கவிதை )… முனைவர். கிருஷ்ண திலகா திலகா.

கொல்லவரும் புலியின்
கொடும் பாய்ச்சல் கண்டும் கலங்கிடுமோ.,…
நெடுவேல் நிமிர்ந்த
தோள்??
வேல்விழியாளையும் சாய்த்திடுமே!
வீறுகொண்ட வேங்கையையும் வீழ்த்திடுமே!

தமிழ்மறவன் !!
தலைதாழா வேல்மறவன் !
நிலைகுலைந்து
போவதுண்டோ?
நெடும் பாய்ச்சல்தனைக் கண்டு ?
சுட்டெரிக்கும் பார்வையில்
விட்டெறியும்
வேலே வெல்லும் காண் !

சீறும் புலியைச்
சினங்கொண்டு அடக்க
வேல்கொண்டு எறியும் வீரன்
தாரணிந்த மார்பு
பகைவர் வாள்நுனி
சிதைத்த மார்பு !
கூர்கொண்ட நகத்திற்கோ
அஞ்சிடும் ?
நேர்கொண்ட பார்வைபோதும்
நெடுவேல் எதற்கு ?

சீறும் புலியைச்
சினங்கொண்டு அடக்க
வேல்கொண்டு எறியும் வீரன்
தாரணிந்த மார்பு
பகைவர் வாள்நுனி
சிதைத்த மார்பு !
கூர்கொண்ட நகத்திற்கோ
அஞ்சிடும் ?
நேர்கொண்ட பார்வைபோதும்
நெடுவேல் எதற்கு ?வாளை உயர்த்து!
தடந்தோள் கொண்டே
தமிழர் பெருமை உயர்த்து!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *