கவிதைகள்
வெளியே வராதே சகோதரா!… முனைவர். கிருஷ்ண திலகா திலகா.

வெளியே வராதே சகோதரா!
வந்துட்டா…வேதனைத்….தான் படுவே!
வேண்டாமென்று நான் சொல்லுவேன்!
வெளியே…வராதே …சகோதரா!
வேண்டாதக் கிருமியாலே…அடையாத துயரில்லை!
வேண்டாதது அத்தனையும் நடக்குது!
வேண்டியதைத் தேடித்தேடி…வேகாத வெயிலிலே..
வேகமாக நடக்கத்தான் வைக்குது!
வேலையில்லை!வெட்டியில்லை!
வேண்டமட்டும் சாராயம் தான் கிடைக்குது!
வெட்டிக்கிட்டு மக்களெல்லாம் சாகுது!
வேடிக்கை அரசாங்கம் வெகுளியாக சிரிக்குது!
வெளியே மட்டும் வந்திடாதே ராசா!
வெட்கக்கேடைச் சொல்வதென்றால் லேசா?
வெள்ளமெனக் கண்ணீரில் மூழ்கிடுவாய் நாளும்!
வெறுத்து போய் காற்றோடு கலந்திடுவாய் நீயும்!!
*முனைவர் கிருஷ்ணதிலகா*
![]()