கதைகள்

உஷ்!…. ( குட்டிக்கதை )… சங்கர சுப்பிரமணியன்.

கோவிலில் அம்மாவிடம் மகன்,

“அம்மா நேற்று நீ என்னை
குளிப்பாட்டியபின் வெளியே
சென்றேன். அப்புறம் என்ன நடந்தது சொல்லுங்க” என்று கேட்டான்.

“தெரியலயே”

“குளித்துவிட்டு  வெளியேபோய் உடம்பெல்லாம் மண்ணாக்கிட்டு வந்திருக்கியேன்னு சொல்லி அடிச்சீங்க.”

“ஆமாம்”

“இப்ப சாமிக்கு அபிசேகம்
பண்ணியபின் விபூதியை உடலெல்லாம் போட்டால் கும்பிடுறீங்க”  என்றவனை,

“உஷ்” என்று அதட்டிய தாய்
பேசாதே என்று உதட்டின் மேல் விரலை வைத்து சைகை செய்தாள்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *