எங்கிருந்தாலும் வாழ்க என்ற பாடல் வரிகளில் என் வரிகள்!…. சங்கர சுப்பிரமணியன்.

நலமுடன் என்றும் வாழ்க
நலமுடன் என்றும் வாழ்க
எந்த நோயையும் எதிர்த்து வாழ்க
கொரோனாவை எதிர்த்துமே வாழ்க
அதன் பிடியல் சிக்காமலே நீ வாழ்க
வாழ்க…..வாழ்க…..
நலமுடன் என்றும் வாழ்க
எந்த நோயையும் எதிர்த்து வாழ்க
கொரோனாவை எதிர்த்துமே வாழ்க
அதன் பிடியில் சிக்காமலே வாழ்க
வாழ்க…..வாழ்க…..
நலமுடன் என்றும் வாழ்க
கொரோனா அங்கே
வராதிருந்தாலும்
அதுவும் உன்னை தொற்றா
விட்டாலும்
கொரோனா அங்கே
வராதிருந்தாலும்
அதுவும் உன்னை தொற்றா
விட்டாலும்
பயந்த நாளை நினைத்திருந்தாலும்
நண்பனே நீ வாழ்க
வாழ்க…..வாழ்க….
நலமுடன் என்றும் வாழ்க
வாராய் என்றுனை சொல்லிட இருந்தேன்
வந்த ஊரடங்கால் வராதுமே போனாய்
வாராய் என்றுனை சொல்லிட இருந்தேன்
வந்த ஊரடங்கால் வராதுமே போனாய்
உறவினை காக்கும் கடமையை உணர்ந்தாய்
உயர்ந்தவனே நீ வாழ்க
வாழ்க…..வாழ்க…..
நலமுடன் என்றும் வாழ்க
தொற்றிய நோயும் எனை விட வேண்டும்
இருண்ட வாழ்வில் ஒளிபெற வேண்டும்
போற்றும் நட்பும் தொடர்ந்திட வேண்டும்
புரிந்தவனே நீ வாழ்க
வாழ்க…..வாழ்க…
நலமுடன் என்றும் வாழ்க
எந்த நோயையும் எதிர்த்து வாழ்க
கொரோனாவை எதிர்த்துமே வாழ்க
அதன் பிடியில் சிக்காமலே வாழ்க
வரக்…..வாழ்க…..
நலமுடன் என்றும் வாழ்க!
– சங்கர சுப்பிரமணியன்.
![]()