கவிதைகள்

ஈடற்ற பத்தினியின் பாடல் வரிகளில் எனது வரிகள்!… (கவிதை)… சங்கர சுப்பிரமணியன்.

ஈடற்ற வாழ்வுதனை எட்டி உதைத்தவன் நான்
அதன் சிறப்பை உணராது சீரழிந்நு போனவன் நான்
வாழும்வழி மறந்து வழிதவறி போனபின்னே
வாழ்வைத் தொலைத்து விட்டு வந்துநின்ற பாவியும் நான்

அந்த தவறைச் செய்தே அழிந்து நான் போனபின்னே
இனி எந்த தவறைச் செய்தால்
என்ன என் அன்பு நண்பா!
என்ன என் அன்பு நண்பா!!

ஆரம்பமானதும் கிருமிக்குள்ளே
அதுபரவி பெருகுவதும் மனிதருக்குள்ளே
நோய் ஆரம்பமானதும் கிருமிக்குள்ளே
அது பரவிப் பெருகுவதும் மனிதருக்குள்ளே
சொன்னாலும் கேட்காமல் போனதாலே
சோதித்து தெரிந்ததிப்போ தன்னாலே

சொன்னாலும் கேட்காமல் போனதாலே
சோதித்து தெரிந்ததிப்போ
தன்னாலே

ஆரம்பமானதும்…..
நோய் ஆரம்பமானதும் கிருமிக்குள்ளே
அதுபரவிப் பெருகுவதும் மனிதருக்குள்ளே
சொன்னாலும் கேட்காமல் போனதாலே
சோதித்து தெரிந்ததிப்போ தன்னாலே

கண்டித்து சொன்னாலும் கெஞ்சியே கேட்டாலும் கேட்டு நடந்தேனா அன்பு நண்பா
கண்டித்து சொன்னாலும் கெஞ்சியே கேட்டாலும் கேட்டு நடந்தேனா அன்பு நண்பா
நோயுடனே சேர்ந்து வாழத் துணிந்தவன் சொன்னாலும் கேட்பேனா அன்பு நண்பா
நோயுடனே சேர்ந்து வாழத் துணிந்தவன் சொன்னாலும் கேட்பேனா அன்பு நண்பா

https://www.youtube.com/watch?v=F2cIi1Q1CPg

ஆரம்பமானதும்…..
நோய் ஆரம்பமானதும் கிருமிக்குள்ளே
அதுபரவிப் பெருகுவதும் மனிதருக்குள்ளே

தப்புக்கும் மேலான தப்பை நான் செய்துவிட்டு
தனிமையில் இருப்பவன் அன்பு நண்பா
தப்புக்கும் மேலான தப்பை நான் செய்துவிட்டு
தனிமையில் இருப்பவன் அன்பு நண்பா
நினைத்து நினைத்து அதை தினமும் புலம்பினாலும்
நோய்தீர்ந்து வருவேனோ அன்பு நண்பா
நோய்தீர்ந்து வருவேனோ அன்பு நண்பா

ஆரம்பமானதும்…..
நோய் ஆரம்பமானதும் கிருமிக்குள்ளே
அதுபரவிப் பெருகுவதும் மனிதருக்கள்ளே

நோய் இருந்தவனே பரப்பி விட்டான்டா நண்பா
கூட இருந்தவனும் ஓடிப்போனான்டா மச்சான்
நோய் இருந்தவனே பரப்பி விட்டான்டா
கூட இருந்தவனும் ஓடிப்போனான்டா

முகக்கவசம் எனக்கிருந்தும் போட்டுக்கொள்ள மனமிருந்தும்
போடாமல் வீம்பு செய்தேன் நானும்
அதை புரிந்துகொண்டேன் எனக்கு இது வேணும்
முகக்கவசம் எனக்கிருந்தும்
போட்டுக்கொள்ள மனமிருந்தும்
போடாமல் வீம்பு செய்தேன் நானும்
அதை புரிந்துகொண்டேன் எனக்கு இது வேணும்

மச்சான் நோய் இருந்தவனே பரப்பி விட்டான்டா
கூட இருந்தவனும் ஓடிப்போனான்டா

எவனும் வந்து கெடுக்கவில்லை
எவரும் வந்து கொடுக்கவில்லை
எவனும் வந்து கெடுக்கவில்லை
எவரும் வந்து கொடுக்கவில்லை
எங்கோ சென்று வாங்கிவந்தேன்
கொரோனாவை
அது எனக்கு அழித்திடுமோ சாவை
மச்சான் நோய் இருந்தவனே பரப்பி விட்டான்டா
கூட இருந்தவனும் ஓடிப்போனன்டா

மூச்சு விடமுடியாமல் சாகப்போகும் பாவிக்கு
நண்பனும் ஏதுக்கடா மச்சான் நண்பனும் ஏதுக்கடா

மூச்சு விடமுடியாமல் சாகப்போகும் பாவிக்கு
நண்பனும் ஏதுக்கடா மச்சான் நண்பனும் ஏதுக்கடா
மூச்சு விடமுடியாமல் சாகப்போகும் பாவிக்கு
நண்பனும் ஏதுக்கடா மச்சான்
நண்பனும் ஏதுக்கடா

உறவினை ஊரினை மறந்து நடந்தவனை
மன்னித்தலாகாதடா..ஆ..ஆ…ஆ
உறவினை ஊரினை மறந்து நடந்தவனை
மன்னித்தலாகாதடா நண்பா மன்னிக்கக்கூடாதடா

மூச்சுவிட முடியாமல் சாகப்போகும் பாவிக்கு நண்பனும் ஏதுக்கடா மச்சான் நண்பனும் ஏதுக்கடா!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *