கதைகள்

படம் பார்க்கப் போகின்றோம்!… ( குட்டிக்கதை ) …. கே.எஸ்.சுதாகர்.

50 வார்த்தைகளுக்குள் ஒரு குறும் கதை

  படம் பார்க்கப் போகின்றோம்.

படம் பார்க்கப் போகின்றோம் என்றார் அப்பா. வாத்தியார். கறார் பேர்வழி. கோவிலைத் தவிர எங்கும் போகவிடமாட்டார்.

ரவுணிற்குக் காரில் போனோம். குதூகலம். ’திருவிளையாடல்’ பார்த்ததில் ஒருவருக்கும் மகிழ்ச்சியில்லை.

பிரச்சினை அடுத்தவாரம் ஆரம்பித்தது. எல்லாரையும் இருத்தி, பார்த்த படத்திலிருந்து கேள்விகள் கேட்கத் தொடங்கினார். கட்டுரை எழுதச் சொன்னார். போதும் என்றாகிவிட்டது.

திஜேட்டரில் ’தெய்வம்’ படம் மாற்றப்படும்வரை வில்லங்கம் தொடர்ந்தது.

“ரவுணிலை நல்ல படமொண்டு ஓடுதாமே!” அப்பா ஆரம்பிப்பதற்குள்….. ஒருவரையும் காணோம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *