கவிதைகள்
கொரோனாவும் தொழிலாளியும்!… சங்கர சுப்பிரமணியன்.

ஓடிஓடி உழைத்து வந்தோம்
ஊரெல்லாம் சுற்றி வந்தோம்![]()
ஆமை ஓட்டுக்குள் இருப்பது போல்
இருக்கின்றோம் வீட்டில் அடைபட்டு
கொரோனா வந்ததும் இங்கே
எங்கள் தொழிலெல்லாம் தொலைந்ததிங்கே
தொழிலாளி மட்டும் வீட்டில் இல்லை
முதலாளாளியும் ஓட்டமின்றி ஓய்ந்திட்டாரே
ஓய்வின்றி உழைத்த போதும்
அரை வயிற்றுக் கஞ்சியாவது நாங்கள்
அன்றாடம் குடித்து வந்தோம்
அதுவம் இப்போ போய்விடுமோ
உழைத்து உழைத்தே ஓடாகிப் போனாலும்
ஒருவாய் கஞ்சியே குடித்தாலும்
உள்ளுக்குள் அமைதிக்கு குறைவு இல்லை
இந்த கொரோனாவால் அமைதி தொலைந்துபோச்சு
உழைப்பதற்கு நாங்களுமே அஞ்சவில்லை
உழைக்கும் நாட்டில் என்றுமே பஞ்சமில்லை
உழைத்து வாழும் எங்களையும் வாழவிடு
கொரோனாவே எங்களை விட்டு ஓடிவிடு!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()