கொரோனாவும் முதலாளியும்!…. சங்கர சுப்பிரமணியன்.

முதல் இருந்து தொழில் செய்தால் தொழிலாளி
தொழில் முடங்கி முதலும் பறிபோனால் யார் முதலாளி?
முதல் முழுதும் கொரானோவால்
இழந்திட்டால்
அவனுமே ஆகிடுவான் விரைவில் தொழிலாளி
பெருமுதலாளி எல்லாம் பெருங்
கவலையோடிருக்க
சிறுமுதலாளி எல்லாம் சீரழிவின்
விளிம்பிலிருக்க
முதலாளியும் தொழிலாளியுடன்
மொத்தமாய் கலங்கிநிற்க
அத்தனை துன்பங்களும் அழியாதோ
வாழை வைத்து பயிர் செய்த பெருமுதலாளியும்
வாழவழியின்றி வாங்க யாருமின்றி வாடுகிறான்
மூளையை பெருமுதலாய் கொண்டவனும்
மூலையிலே முடங்கி அங்கே கிடக்கிறான்
இஞ்சியையும் மஞ்சளையும் பயிரிட்டுவிட்டு
கொஞ்சமும் மன அமைதியின்றி திரிகிறான்
மிஞ்சுவண்ணம் ஆலைவைத்த முதலாளியெல்லாம்
எஞ்சுவது என்னவென்று தெரியாது முழிக்கிறான்
இல்லாதவன்தான் இல்லாததால் வருந்தினான்
இப்ப இருப்பவனும் ஒன்றாய் சேர்ந்தே வாடுறான்
கண்ணீரிலே சமத்துவம் கண்ட கொரனாவே
கண்ணீரற்ற சமத்துவமே வேண்டும் போய்விடு
-சங்கர சுப்பிரமணியன்.
![]()