கவிதைகள்
சித்திரையே சித்திரையே சிரித்து விடாதே!… கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

சித்திரையே சித்திரையே சிரித்து விடாதே
சிரிப் புடைக்க சிறந்தவில்லன் தெரிவில் தெரிகிறான் 
இத்தரையில் பிறந்துவிட்டால் சிரிக்கக் கூடாதா
சிரித்து விட்டால் சிறந்தவில்லன் முகத்தைச் சுழிக்கிறான்
சித்திரையே சித்திரையே சிரித்து விடாதே
சொல்லுக்கடங்காமல் கொரனோ
எம்மைப் பிடிக்க வருறான் – அவன்
தொல்லை ஒழிந்தொழிய தினம் நமது
எல்லையைக் காத்திடுவோம்
காணும் இடத்திலெல்லாம் அவன்
காட்சி நிறைந்திருக்கு
கனவு காணும் வேளை கொரனோ
கவி பாடி உலவுகிறான்
எந்தப் பொருளைத்தொட்டால் அவன்
எப்படி வருவானோ
சொந்த மனையாள் கூட சற்று
எட்டவே நில் என்கின்றாள்
சித்திரையே சித்திரையே சிரித்து விடாதே
சிரிப் புடைக்க சிறந்தவில்லன் தெரிவில் தெரிகிறான்
![]()