கவிதைகள்
கரோனாவும் பெற்றோரும்!…. சங்கர சுப்பிரமணியன்.

ஆற்றோரம் மணலெடுத்து அழகழகாய் வீடுகட்டி
வாழ்ந்து வந்த பெற்றோரின்று
வருத்தமுடன் இருக்கின்றாரே
ஓடி விளையாடு பாப்பா என்று
கூடிவிளையாடச் சொன்னவரோ
கூடிவிளையாட வேண்டாமென
வீட்டில் இருக்கச் சொல்கிறாரே
கைகழுவ மறந்தேன் ஒருநாள்
கைகழுவெனவே அன்னை
சொன்னாள்
பரிகசித்தே கைகழுவி வந்தேன்
பலமுறை கழுவுகின்றேனே இன்று
அருமை அம்மா ஆசைஅப்பா
அன்று நோயின்றி காத்துவந்தீர்
நீங்கள் வெளியே செல்லாதீர்
கொரோனா நோய் வராதிருக்க
பெற்றோரை பாதுகாத்திடவே
உற்ற நேரம் இது என்றறிவோம்
ஆற்றொனா துயர் வந்திடினும்
காற்றாய் பறந்தும் போய்விடுமே!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()