கவிதைகள்
கரோனாவும் கடவுளும்!…. சங்கர சுப்பிரமணியன்.

இறைவன் இருக்கின்றானா?
மனிதன் இன்று கேட்கின்றான்!
அவனிருந்தல் நம்மை காக்காமல்
எங்கே மறைந்து வாழ்கின்றான்?
தூணிலும் இருப்பவனென்கிறார்
துரும்பிலும் இருப்பானென்கிறார்
கொரோனாவைப் பார்த்ததுமவன்
கோபம் கொண்டு எழவில்லையே
குண்டுவீச்சால் அழிந்தபோதும்
மக்களைக் காக்க வரவில்லையே
கொரோனா கொடுமை கண்டும்
கொஞ்சமும் மனம் இரங்கலயே
பால் அபிசேகம் செய்தவரும்
பால்வாங்க வெளியே வரமுடியல
அன்னதானம் செய்தவருமிங்கே
அன்னத்துக்கு அல்லாடுகிறாரே
பாஞ்சாலிக்கு ஓடோடி வந்தார்
பாவமென யானைக்கு பதறினார்
எம் உயிருக்கிங்கு மதிப்பிலயோ
இது பெரிய துன்பம் இல்லையோ
கைதட்டியும் கொரோனா ஓயல
விளக்கேற்றியும் பயந்து ஓடல
சீக்கிரம் ஓடிவந்து எமை காத்திடு
நீயில்லை என்பாரை மடக்கிவிடு!
-சங்கர சுப்பிரமணியன்.
![]()