Featureகதைகள்

கல்…புல்…காகம்!…40…(நாவல்)…..சங்கர சுப்பிரமணியன்.

திருமணத்துக்கு அம்மாவிடமிருந்து  சம்மத்கம் கிடைத்தபின் அவனது மனம் மகிழ்ச்சியில்
இறக்கைகட்டி பறந்தது. இதை உடனே தனது காதலியிடம் சொல்லிவிடத் துடித்தான். பலமுறை
தொலைபேசியில் அழைத்தும் விமலாவின் தொலைபேசி இணைப்பு கிடைக்காததால் பொறுமை
இழந்தான்.

என்ன இது? எவ்வாவு ஆவலாக அம்மா சம்மதித்து விட்டாள் என்பதை சொல்லலாம் என்றால்
இவள் தொலைபேசியை எடுக்கவே மாட்டேங்கிறாளே என்று துடித்துக் கொண்டிருந்தவனுக்கு
திடீரென்று விமலாவிடமிருந்து தொலைபேசி அழைப்புவரவே ஆவலுடன் தொலைபேசியை
எடுத்து,

“ஹலோ, ஹலோ விமலா என்ன ஆச்சு உனக்கு? ஏன் போனை எடுக்கவே இல்லை?”

“மனோகரா ஏன் இப்படி பதறுகிறாய்? இருபத்தியொரு தடவை மிஸ்டு கால் கொடுத்திருக்கிறாய்.
என்ன ஏதாவது பிரச்சனையா? நான் ஊரில் என் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர்கள்
பிரச்சனை பண்ணுகிறார்கள்.”

“அப்படி என்ன பிரச்சினை?” என்று கேட்க,

விமலா பொலபொலவென்று அழ ஆரம்பித்தாள். அப்படி அவள் அழ ஆரம்பித்ததும் மனோகரனும்
அதிர்ந்துபோய் விமலாவிடம் அப்படி என்ன பிரச்சனை சொல் என்றான். எந்தவிதமான பிரச்சனையாய்
இருந்தாலும் சரிசெய்துவிடலாம் என்று ஆறுதலாகப் பேசினான். அதற்கு விமலா இந்த பிரச்சனையை
அவ்வளவு எளிதில் தீர்த்து விடமுடியாது என்றவள் தன் பெற்றோர்கள் தன்னை திருமணத்துக்கு
வற்புறுத்துவதாகவும் அவர்களுக்கும் வயது ஆகிக்கொண்டே போவதால் தாங்கள் செய்து முடிக்க
வேண்டிய கடமையை செய்து முடித்துவிட்டால் நிம்மதியாக இருப்போம் என்கிறார்கள். அவர்கள்
நமது காதலுலுக்கு எவ்வித எதிர்ப்பும் சொல்லவில்லை. ஆனால் நல்ல நல்ல இடங்களில்
இருந்தெல்லாம் பெண்கேட்டு வருகிறார்களென்றும் ஆதாலால் நீ விரும்பியபடியே காதலனை
விரைவில் திருமணம் செய்துகொள் அல்லது வருகின்ற நல்ல வரன்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து
திருமணம் செய்துகொள். உனக்கும் வயதாகிக்கொண்டே போகிறது இன்னும் எத்தனை நாள்
இப்படியே இருப்பாய் என்று என்னை வாட்டி எடுக்கிறார்கள். நான் என்ன செய்யட்டும்? என்றாள்.
அதனால்தான் நீ அவ்வளவு தடவை போன்பண்ணியும் போனை சைலன்சில் போட்டிருந்ததால்
எடுத்து பேசமுடியவில்லை என்றாள்.

விமலா சொன்னதையெல்லாம் அமைதியாகவும் ஆர்வத்தை அடக்கிக்கொண்டும் கேட்டுக்கொண்டிருந்த
மனோகரன் அவளை கொஞ்சம் சீண்டிப்பார்க்கலாம் எடுத்த எடுப்பிலேயே அம்மா திருமணத்துக்கு
சம்மதம் சொன்ன மகிழ்ச்சியான செய்துயை சொல்லவேண்டாம் என எண்ணினான். எப்பவுமே
துன்பத்துக்கு பின்னே வரும் இன்பமும் கடும்வெயிலில் நடந்தபின் தென்படும் நிழலும் தரும் சுகமே
அலாதிதான் என்பதனால் அப்படியே விமாலாவிடம் கொஞ்சம் விளையாடினான்.

“என்ன விமலா இப்படி தலையில் இடிவிழுந்த மாதிரி செய்தியை சொல்ற?”

“என்ன, என்ன? என்ன சொன்னாய்? நம்ம திருமணத்தைப்ப்ற்றி பேசினால் உனக்கு தலையில் இடி
விழுந்த மாதிரி இருக்கா?”

“அய்யோ அப்படியெல்லாம் தப்பாக நினைக்காதே. உனது தர்மசங்கடமான நிலையை எண்ணித்தான்
அப்படி  சொன்னேன். வேறொன்றும் இல்லை”

“சரி, சரி நம்பிட்டோம். இப்ப நம்ம திருமணத்தைப்பற்றி பேசலாமா?”

“அது பற்றித்தான் யோசிக்கிறேன்”

“என்ன யோசிக்கிறாயா? நான் எவ்வளவு சீரியஸா சொல்லிக்கிட்டிருக்கேன்”

“நானும் அதுபற்றித்தான் ரெம்பவும் தீவிரமாய் யோசிக்கிறேன். இப்ப நம்ம இரண்டுபேர் வீட்டிலும்
திருமணத்துக்கு தடையேதும் சொல்லாவிட்டாலும் இப்போது உடனடியாக திருமணம் நடைபெற
என் வீட்டில் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. உனது பெற்றோர் சொல்வதிலும் நியாயம் இருக்கு.
ஆதலால்….?”

“ஆதலால் என்ன ஆதலால்! சொல்ல வருவதை இழுக்காமல் விபராமாகச்சொல்” என்றாள்.

“இல்ல… நீ எதற்கு வருகின்ற நல்ல நல்ல வரன்களில் யாரையாவது ஒருவரை தேர்ந்தெடுத்து
திருமணம் செய்துகொண்டு உன் பெற்றோர்களின் ஆசையை தீர்த்து வைக்கக்கூடாது” என்றான்.

(தொடரும்)

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *