எனக்கு அழ தெரியாது !
எவருக்கு முன்னுக்கும் எனக்கு அழ தெரியாது.
என் சோகங்களை நெஞ்சுக்குள் புதைத்து வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
என் கண்ணீரை காட்டி என் கூட இருப்பவர்களின் புன்னகையை பறித்து விட நான் விரும்பவில்லை…
என் சோகங்கள் யாரின் சந்தோஷத்தையும் தொலைத்து விடாது.
என் அழுகை எனக்கு நெருக்கமானவர்களை காயப்படுத்தும் !
என்னை நம்புகிறவர்களுக்கு நான் கோழையாக தெரியும்!
நான் தோற்று விட்டேன் என்று சில அனுதாபங்கள் என் மேல் ஏற்படும்.
சில விட்டுக்கொடுப்புகள் அந்த கண்ணீர் துளிகளுக்காக வழங்கப்படும்.
எவரையும் வருத்தக் கூடாது என்பதற்காகவே நான் நன்றாகவே நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
வேதனைகளை வெளியே காட்டாமல் இருப்பது எனக்கு அவ்வளவு கடினமானதாக இப்போது தெரியவில்லை…
இது எனக்கு பழகிவிட்டது இதுவும் தியாகம் என்று என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.
எல்லோரிடமும் சிரித்து சந்தோசமாக கொண்டாடி நாட்களை நகர்த்துகிறேன்.
எவருக்கு முன்னுக்கும் தான் எனக்கு அழ தெரியாது.
ஆனால் தனிமை என்று வரும் போது ஏனோ எல்லாவற்றுக்கும் சேர்த்து மொத்தமாய் அழுகின்றேன்.
நெடுந்தீவு முகிலன்