உலகம்

பிரித்தானியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள பிரெக்ஸிட் விவகாரம் – பர்னம்மை எச்சரிக்கும் தலைவர்கள்

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைவது தொடர்பில் அரசியல் களம் சற்று கொந்தளிப்பாகவே காணப்படுகிறது.

தொழிலாளர் கட்சி என்ன விலைக் கொடுத்தென்றாலும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய முனைப்பு காட்டி வருகின்ற நிலையில் மறுபுறம் தெரேசா மே உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள், கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் மற்றும் மக்கள் என பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற விவாதங்களில் முக்கிய இடம்பிடித்துள்ள இந்த விவகாரத்தால் உட்கட்சிக்குள்ளேயே சில பூசல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக தொழிலாளர் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இந்நிலையில் தொழிலாளர் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜான் ட்ரிக்கெட் Jon Trickett , முற்போக்கான பிரெக்ஸிட் ஆதரவு பிரச்சாரத்தை progressive pro-Brexit campaign, தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை, பிளவுபட்டிருக்கும் பிரெக்ஸிட் ஆதரவுக் களத்தில் மேலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

மேலும் ஜான் ட்ரிக்கெட் Jon Trickett ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளை நாடுவதற்காக பிரதமர் ஆண்டி பர்னமை விமர்சித்துள்ளார்.

அந்த கூட்டமைப்பை ஒரு நவதாராளவாத நிறுவனம் என்று அழைத்த அவர், இந்த விவாதத்தை மீண்டும் தொடங்குவது தவறான கணிப்பு என்றும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *