இலங்கை

லிமினினின் புதிய அவதாரம் – நாமலின் அரசியலை மாற்றப்போகும் மனைவி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை காப்பாற்றும் தீவிர முயற்சியில் அவரது மனைவி லிமினி ராஜபக்ச ஈடுபட்டுள்ளதாக தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்ச குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான ஒருவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல்வாதிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

2029ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாரை தங்கள் கட்சி வேட்பாளராக களமிறக்குவது என்பது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் நாமலை களமிறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் நாமலின் மனைவி

ஒரு வேளை நாமலை களமிறக்க முடியாமல் போனால் அவரது மனைவியை களமிறக்குவது குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

சமகாலத்தில் லிமினி ராஜபக்ச பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபல்யமான ஒரு கதாபாத்திரமாக மாறியுள்ளார்.

அவர் முன்னாள் ஜனாதிபதி சிறிமாவே பண்டாரநாயக்க அளவிற்கு ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறார். எனினும் லிமினி ராஜபக்சவுக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என ராஜபகச் குடும்பத்திற்கு நெருக்கமானவர் தெரிவித்துள்ளார்.

நாமலை காப்பாற்றுவதற்காக லிமினி ராஜபக்ச சத்தியாகிரகத்தில், ஈடுபட்டுள்ளார்.

அரசியல் சிந்தனை

அனுராதபுரத்திற்கு சென்று வழிப்பாடுகளில் ஈடுபடுகின்றார். பெண்களின் வழிப்பாடுகள் எப்போதும் சக்திவாய்ந்தவையாகும்.

லிமினினின் புதிய அவதாரம் - நாமலின் அரசியலை மாற்றப்போகும் மனைவி | Limini In Action To Save Namal

அத்துடன் அவர் தினமும் மகிந்த ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்சவை சந்திக்க செல்கின்றார்.

தனது பிள்ளைகளுக்கு அதிகம் நேரம் செலவிடுகின்றார். அவ்வாறான நிலையில் அவர் குடும்பத்திற்காக தன்னை அர்ப்பனித்து வருகின்றார். அவர் அரசியல் சிந்தனையில் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *