உலகம்

பல லட்சம் தவறான வீடியோக்கள்; இங்கிலாந்தில் 20 வருடங்களாக மனைவியை பலரிடம் பகிர்ந்த கணவன்

போதை மருந்து கொடுத்து, மயக்கமடைய செய்து, 20 வருடங்களாக பெண்ணை 13 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் கிரேட்டர் மான்செஸ்டரில் ஸ்டாக்போர்ட் நகரில் வசித்து வரும் 60 வயது நபர் சர்ச்சையான வழக்கில் சிக்கியுள்ளார்.

பல லட்சம் தவறான வீடியோக்கள் ; இங்கிலாந்தில் 20 வருடங்களாக மனைவியை பலரிடம் பகிர்ந்த கணவன் | Uk Man Shared Wife With Others 20 Yrs

 

இவர், 20 வருடங்களாக மனைவிக்கு போதை மருந்து கொடுத்து, மயக்கமடைய செய்து, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அவர் வேறு ஆண்களையும் வீட்டுக்கு அழைத்து, அவருடைய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய வைத்துள்ளார்.

இந்த விசயம் எதுவும் அவருடைய மனைவிக்கு தெரிய வரவில்லை. ஏனெனில், மனைவிக்கு தெரியாமல் இரவில், போதை கலந்த ஒயின் கொடுத்து, அவரும், பிற ஆண்களும் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதற்காக பல கலவையான போதை மருந்துகளை கணவர் பயன்படுத்தி வந்திருக்கிறார். இதனால், சுய நினைவில்லாத சூழலிலேயே, அவருக்கு கொடுமைகள் நடந்துள்ளன. அவை பல கோணங்களில் படம் பிடிக்கப்பட்டும் வந்துள்ளன.

இதற்கு சிலர் உதவியும் உள்ளனர். அந்த நபரின் மொபைல் போனை பொலிஸார் பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தவறான புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்துள்ளன.

விசாரணையில், 62 பாலியல் சம்பவங்களை அந்த கணவர் ஒப்பு கொண்டிருக்கிறார். அவருடன் வேறு 4 பேரும் குற்ற செயல்களை ஒப்பு கொண்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *